Type Here to Get Search Results !

ஜனவரி 24

👉 தேசிய பெண் குழந்தைகள் தினம்

👉 தேசிய கீதம் அறிவிக்கப்பட்ட தினம்

👉 சி.பி.முத்தம்மா பிறந்த தினம்

👉 ஹோமி ஜஹாங்கீர் பாபா நினைவு தினம்


🌷 2015ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி தமிழ்த் திரைப்பட நடிகர் வி.எஸ்.ராகவன் மறைந்தார்.

🌷 1857ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி தெற்காசியாவின் முதலாவது முழுமையான பல்கலைக்கழகம் கல்கத்தா பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது.


தேசிய பெண் குழந்தைகள் தினம்

🌷 இந்தியாவில் பெண் குழந்தைகளின் நலனை காக்கும் விதமாக ஜனவரி 24ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மறைந்த பிரதமர் திருமதி.இந்திரா காந்தி அவர்கள் 1966ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி நம் நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவி ஏற்றார். அந்த நாள் 2009ஆம் ஆண்டிலிருந்து தேசிய பெண் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.


தேசிய கீதம் அறிவிக்கப்பட்ட தினம்

🌷 தாகூர் அவர்களால் இயற்றப்பட்ட தேசிய கீதம் (ஜன கண மன) முதன்முறையாக 1911ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது. சுதந்திரமடைந்து 3 ஆண்டுகளுக்கு பின்னரே, அதாவது 1950ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி இப்பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


சி.பி.முத்தம்மா

🌷 இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பெண் அதிகாரி சி.பி.முத்தம்மா 1924ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி கர்நாடக மாநிலம் விராஜ்பேட்டையில் பிறந்தார்.

🌷 இவர் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரியாக 1949ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். ஆண், பெண் அதிகாரிகள் இடையே பாகுபாடு, தனித்தனி விதிமுறைகள் என சட்டப் பிரிவில் கூறப்பட்டிருந்தது. இதுபோன்ற சட்டங்கள் அரசியல் சாசனத்துக்கு எதிரானவை. இந்த பாலினப் பாகுபாடுகள் களையப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் முத்தம்மா.

🌷 வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணய்யர் இந்த விதிகள் அரசியல் சாசனத்துக்கு முரண்பட்டது என்று அறிவித்து, இவர் பதவி உயர்வுக்கு எல்லா வகையிலும் தகுதியானவர் என்றும் தீர்ப்பு கூறினார். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த தீர்ப்பு சட்டத்தை திருத்தி எழுத ஒரு வாய்ப்பாக அமைந்தது.

🌷 நெதர்லாந்து நாட்டின் இந்திய தூதராக நியமிக்கப்பட்டார். 33 ஆண்டு அரசுப் பணிக்குப் பிறகு, 1982ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் தனது 85வது வயதில் (2009) மறைந்தார்.


ஹோமி ஜஹாங்கீர் பாபா

🌷 இந்திய அணுவியல் துறை தந்தையாக விளங்கிய ஹோமி ஜஹாங்கீர் பாபா 1909ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி மும்பையில் பிறந்தார். 1932ல் மேற்படிப்பை முடித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலேயே தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். 1934ஆம் ஆண்டில் டாக்டர் பட்டம் பெற்றார். இவர் நீல்ஸ் போருடன் இணைந்து குவாண்டம் கோட்பாடு ஆராய்ச்சியும், வால்டர் ஹைட்லருடன் இணைந்து காஸ்மிக் கதிர்கள் பற்றியும் ஆராய்ச்சிகள் செய்துள்ளார்.

🌷 இவருக்கு பாரதத்தின் உயர் விருதான பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது(1954). இவரது அரிய தொண்டு என்றென்றும் நினைவுகூரப்பட வேண்டுமென்ற எண்ணத்தில்தான் மும்பை அணுசக்தி ஆராய்ச்சி மையம், 1967 முதல் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம்(டீhயடிhய யுவழஅiஉ சுநளநயசஉh ஊநவெசந) எனப் பெயரிடப்பட்டது.

🌷 அமெரிக்காவில், 1942ஆம் ஆண்டு அணு உலை சோதனை நடத்தப்பட்ட இரண்டாண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் அணுசக்தி இயற்பியல் ஆராய்ச்சிகள் தொடங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி டாடாவுக்கு கடிதம் எழுதினார். அதன்பின் அங்கு ஆய்வுக்கூடம் தொடங்கப்பட்டு, அதன் இயக்குநராக ஹோமி பாபா பொறுப்பேற்றார்.

🌷 அணுசக்தி ஆணையம், அணுசக்தி துறை ஆகியவற்றை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இந்திய அணுசக்தி ஆணையத்தின் முதல் தலைவராக பொறுப்பேற்றார். இதன் காரணமாக இந்தியாவின் முதல் அணு உலை, 1956ல் மும்பை அருகில் உள்ள டிராம்பேயில் செயல்படத் தொடங்கியது. இது ஆசியாவின் முதல் அணு உலை என்ற பெருமையும் பெற்றுள்ளது. ஜஹாங்கீர் ஹோமி பாபா தனது 56வது வயதில் 1966ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி மறைந்தார்.