Type Here to Get Search Results !

School Wiki

 ஸ்கூல் விக்கி : 

www.schoolwiki.in  என்ற முகவரின் மூலம் இணையத்தில் நுழையலாம்.

School Wiki Dashboard



மேலே காணும் படம் விக்கியின் முக்கிய பக்கம் அல்லது முதன்மைப் பக்கமாகும். இதில் மேற்பகுதியில் சிவப்பு நிறத்தில் முதலில் உள்ள கட்டம் உறுப்பினராக சேர்வதற்கான லிங்க் ஆகும். இரண்டாவது உறுபினரானவர்கள் லாகின் செய்து உள்நுழைவதற்கான லிங்க் ஆகும்.

கீழே உள்ள கட்டத்தில் மாவட்டம் வாரியாக உள்ள பள்ளிகளை தெரிவு செய்வதற்கான அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.


லாகின் செய்தபின் விருப்பத் தேர்வுகளை தேர்வு செய்வது எப்படி?

மலையாளத்தில் உள்ள மொழி தேர்வை தமிழுக்கு மாற்றுவதற்கான செட்டிங் ஒழுங்கமைக்கும் முறை.

கிரமிகரணங்கள் என்ற லிங்கை கிளிக் செய்யும் போது நமது அக்கௌண்டின் செட்டிங் பக்கம் திறந்து வரும். அதில் முதலில் உள்ள என்னைப்பற்றி என்ற டேபை கிளிக் செய்யவும்.  கீழே பாஷை என்ற தலைப்பில் உள்ள ml-மலையாளம் என்பதை கிளிக் செய்து ta-தமிழ் என்பதை தேர்வு செய்து கீழே உள்ள சேவ் பட்டனை அமர்த்தவும். இப்போது தமிழ் மொழி தேர்வு செய்யப்பட்டிருக்கும். 

குறிப்பு :- 

நாம் தமிழ் மொழியை தேர்வு செய்வதினால் நாம் எடிட் செய்வதற்கு எளிதாக இருக்கும், இதனால் பார்வையாளர்களுகான தேடலில் எந்த மாற்றமும் இருக்காது. உதாரணமாக மலையாளத்தில் தேடும் ஒருவருக்கு முதன்மை மொழியான மலையாளத்தில்தான் தோன்றும். தேர்வு செய்யும் பயனரின் பயன்பாட்டு மொழியாக மட்டுமே இருக்கும்.



 
தமிழில் தோன்றும் பக்கம் இவ்வாறாக இருக்கும். இப்பக்கதில் பள்ளிகளை தேடும் தேடுபொறியில் பள்ளின் குறியீட்டு எண்ணைக் கொடுத்து பள்ளியை தேர்வு செய்யவும். பின்னர். தொகு என்ற லிங்கை கிளிக் செய்து நாம் திருத்தங்கள் செய்யலாம்.
 

 

info Box Edit

Info Box என்பது வலதுபுறம் பள்ளியின் புகைப்படம் மற்றும் எல்லாம் தகவல்களும் அடங்கிய ஒரு தொகுப்பாகும். இதில் தகவல்களைச் சேர்க்கும் முறை மற்றும் கவனிக்க வேண்டியைகள் பற்றி பார்ப்போம். கீழே உள்ள குறியீட்டை நகலெடுத்து ஒட்டவும். மூலத்தை தொகு என்ற அமைப்பை தெரிவு செய்யும் போது வரும் உரையாடல் பெட்டியில் முதலில் {{PSchoolFrame/Header}}
{{prettyurl| Schoolname}} என்ற இரண்டு கட்டளைகள் இருக்கும். அதன்பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டை எடுத்து ஒட்டவும். அதில் உள்ள ஒவ்வொரு வரிகளிலும் சமம் குறியீட்டிற்கு பின் தகுந்த தகவல்களை உட்படுத்தவும். முடிவில் சேமிக்கவும்.

குறிப்பு : 
 
{{PSchoolFrame/Header}} பக்கத்தின் மேற்பகுதியில் வரும் பள்ளியைபற்றி, வசதிகள், செயல்பாடுகள், வகுப்புகள் போன்ற அடங்கிய மெனுவின் குறியீடாகும். இது முக்கியமானது. அவசியம் இது முதலில் இருக்க வேண்டும்.
 
{{prettyurl| Schoolname}} என்ற குறியீட்டின் பயன்பாடு ஆங்கிலத்தில் பள்ளியை தேடும் போது வருவதற்கான ஒரு குறியீடு இது அவசியமாக இருக்க வேண்டும். இல்லையெனில் ஆங்கிலத்தில் தேடும்போது சிக்கல் வரலாம்.

 

புதிய லிங்குகள் உருவாக்கல்.

[[{{PAGENAME}}/கதைகள்]] 

ஓப்பன் பிராக்கெட் இரண்டை முதல் இடவும். பின்னர் இரண்டு curly bracket தொடங்கவும்  PAGENAME என்ற வார்த்தைகளுக்கு பின் curly bracket ஐ முடிக்கவும். பின்னர் Slash குறியீட்டை இடவும். லிங்கிற்கு கொடுக்க விரும்பும் பெயரை தட்டச்சு செய்து (கதைகள்) ஓப்பன் பிரக்கெட்டை முடிக்கவும். பின்னர் சேமிக்கவும். 

புதியதாக பக்கத்தில் லிங்க உருவாக்கப்பட்டிருக்கும். அதில் கிளிக் செய்யும்போது அது ஒரு புதிய பக்கத்திறகுச் செல்லும் அங்கு உரையாடல் பெட்டி ஒன்று தோன்றியிருக்கும் அதில் நம் தகவல்களை சேர்த்து சேமித்தால் பக்கம் முழுமை அடைந்திருக்கும். 

இப்போது புதியதாக நாம் உருவாக்கிய பக்கத்தின் தலைப்பை நகல் எடுத்து வைக்க வேண்டும். லிங்க உருவாக்கிய முதன்மைப் பக்கத்திற்கு சென்று லிங்கை செலக்ட் செய்து மேல் உள்ள டூல்பாரில் லிங்க் ஐக்கணை கிளிக் செய்து நாம் நகலெடுத்ததை ஒட்ட அந்த பக்கம் கீழே Drop down ல் தோன்றும். அதை செல்க்ட் செய்ய நாம் உருவாக்கிய புதிய பக்கத்திற்கு லிங்க் உருவாக்கப்பட்டிருக்கும். இது நாம் எத்தனை லிங்க்குகள் வேண்டுமானாலும் உருவாக்க முடியும்.

 விக்கியில் அட்டவணைகள் உருவாக்கலாம்.

சாதாரணமான அட்டவனை உருவாக்க கீழே உள்ள குறியீட்டை நகலெடுத்து ஒட்டவும். பின்னர் தேவையான மாற்றங்கள் செய்யது நமக்குத் தேவையான அட்டவணையை உருவாக்கலாம். 
" | " இந்த குறியீட்டின் பெயர் Pipe என்பதாகும். முதல் பத்தியில் ஒரு பைப் லைனும் இரண்டாம் பத்தி தொடங்கும் முன் இரண்டு பைப் லைன் உட்படுத்தி பின்னர் அதற்கான தகவலை உட்படுத்தினால் அட்டவணை உருவாகும். 

நாம் உருவாக்கும் ஒவ்வொரு பத்திக்கும் முன்னர் இரண்டு பைப் லைன் உட்படுத்தி தகவலை சேர்க்க வேண்டும்.
 
 

கொலாப்ஸ் அட்டவணை உருவாக்கலாம்.

 

எழுதுக்களுக்கு நிறம் மற்றும் அளவு

விக்கியில் நாம் உட்படுத்தும் எழுதுக்களின் அளவில் வித்தியாசம் கொண்டு வர பல வழிகளில் HTML ஐ பயன்படுத்தலாம். அதில் எளிமையான சிறந்த வழிகள் <big> </big>
<small>  </small>
<strong>  </strong>
<b>  </b> 
<font size=6> </font>

முக்கிய குறியீடுகள்

<br/>                   புதிய வரிகள் துவங்குவதற்கான HTML code

    *                     புல்லட் சேர்க்க உதவும் HTML code

                    நெம்பர் சேர்ப்பதற்கான HTML code

= = xx = =     தலைப்பைக் கொடுக்க  இடையே சொற்களைச் சேர்க்க உதவும் HTML code

 = = =                 துணைத்தலைப்பு கொடுப்பதற்கான குறியீடு

Insert Box in Wiki

{| class="infobox vcard" style="width:100%"


|ஸ்கூல் விக்கியை தமிழில் வாசிக்க இங்கே சொடுக்கவும்


|}

Insert Shadow Box in Wiki

<div style="box-shadow:10px 10px 5px #888888;margin:0 auto; padding:0.9em 0.9em 0.5em 0.5em; border-radius:7px; border:1px solid gray; background-image:-webkit-radial-gradient(white, #ffffcc); font-size:98%; text-align:justify; width:95%; color:black;">

content

</div>

படங்கள் உட்படுத்த

 [[പ്രമാണം:XXXX.jpeg|thumb|130px|left|<center>'''Image''' (Caption)</center>]]

Gallery உட்படுத்த

<gallery>
[[പ്രമാണം:XXXX1.jpeg|150px|'''Image Caption"]]
[[പ്രമാണം:XXXX2.jpeg|150px|'''Image Caption"]]
[[പ്രമാണം:XXXX3.jpeg|150px|'''Image Caption"]]
[[പ്രമാണം:XXXX4.jpeg|150px|'''Image Caption"]]
[[പ്രമാണം:XXXX5.jpeg|150px|'''Image Caption"]]
[[പ്രമാണം:XXXX6.jpeg|150px|'''Image Caption"]]
</gallery>