👉 ராகுல் டிராவிட் பிறந்த தினம்
👉 திருப்பூர் குமரன் நினைவு தினம்
👉 1966ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி மறைந்தார்.
🌟 இந்திய அளவில் ஜனவரி 11 முதல் 17ஆம் தேதி வரை தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விபத்துகளைக் குறைப்பது, விபத்துகள் ஏற்படாமல் தவிர்ப்பது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
🌹 இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் 1973ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி மத்தியப் பிரதேசத்திலுள்ள இந்தூரில் பிறந்தார். 1996ஆம் ஆண்டு இந்திய அணி சார்பாக ஆடத் தொடங்கிய இவர், அக்டோபர் 2005ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார்.
🌹 டிராவிட் சிறந்த ஆட்டக்காரர் மற்றும் சிறந்த டெஸ்ட் ஆட்டக்காரர் ஆகிய விருதுகளை தொடக்க ஆண்டிலேயே (2004) வென்றார். இவர் பத்மஸ்ரீ விருது, பத்ம பூஷண் போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். நீண்ட நேரத்திற்கு நின்று பேட் செய்யக்கூடிய திறனைப்பார்த்து இவரை தி வால் என்று அழைப்பார்கள்.
🌟இந்திய விடுதலைப் போராட்ட தியாகி திருப்பூர் குமரன் 1904ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந்தார்.
🌟இளம் வயதிலேயே நாட்டுபற்று மிக்கவராகத் திகழ்ந்தார், குமரன். விடுதலை வேட்கையால் உந்தப்பட்டு திருப்பூரில் நடந்த அறப்போராட்டங்களில் கலந்து கொண்டார். பின், பல போராட்டங்களுக்கு தலைமையேற்றார்.
🌟கடந்த 1932ம் ஆண்டு ஜனவரியில், காந்தியடிகளின் சட்ட மறுப்பு இயக்கத்துக்கு ஆதரவாக வீரத்திற்கு பெயர் போன தமிழக மண்ணில் போராட்டம் நடந்தது. இதுவே குமரனின் தலையெழுத்தை தீர்மானிக்கும் சரித்திர நிகழ்வாக அமைந்தது.
🌟காவலர்கள் தடியடி நடத்தி, துப்பாக்கி குண்டுகளை பாய்ச்சிய போதும் 'வந்தே மாதரம்... வந்தே மாதரம்...' என்று முழங்கிக் கொண்டே அவரது இறுதி மூச்சு நின்ற நாள், 1932ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதியாகும்.
Social Plugin