👉 1610ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி கலீலியோ கலிலி ஜூபிட்டர் கோளின் துணைக்கோள்களை கண்டறிந்தார்.
👉 1968ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி நாசாவின் சேர்வயர் 7 விண்கலம் ஏவப்பட்டது.
👉 1968ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி நாசாவின் சேர்வயர் 7 விண்கலம் ஏவப்பட்டது.
🌟 ஜப்பானிய சிறுமி சடாகோ சசாகி 1943ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி ஜப்பானில் பிறந்தார்.
🌟 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி ஹிரோசிமாவில் அணுகுண்டு வீசப்பட்டதால், குருதிப்புற்று நோயால் பாதிக்கப்பட்டாள்.
🌟 சசாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது அவளுடைய தோழி ஒரு தங்கநிற தாளினை சதுரமாக வெட்டி, அதை காகித கொக்காக மடித்து, யாரேனும் ஆயிரம் கொக்குகளை மடித்தால் அவரின் வேண்டுதலை கடவுள் நிறைவேற்றுவார் என்னும் பண்டைய ஜப்பானிய கதையின் நம்பிக்கையை கூறினாள்.
🌟 அதற்கேற்ப அவளும் 1000 கொக்குகளை மடிக்கத் தொடங்கினாள். இறப்பதற்கு முன்புவரை 644 கொக்குகளை மடித்திருந்தாள், பின் எஞ்சிய கொக்குகள் அவளின் நண்பர்களால் மடிக்கப்பட்டு அவளின் உடலுடன் சேர்த்து புதைக்கப்பட்டது.
🌟 ஆயிரம் கொக்குகளின் கதைக்காக இன்றுவரை அறியப்படும் சசாகி தன்னுடைய 12வது வயதில் (1955) மறைந்தாள்.
🌟 அபிநய சரஸ்வதி என அழைக்கப்படும் சரோஜாதேவி 1938ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி பெங்களூரில் பிறந்தார்.
🌟 சரோஜாதேவியை சினிமாத் துறையில் முதன் முதலாக ஹன்னப்ப பாகவதர் தயாரிப்பில் வெளிவந்த மகாகவி காளிதாஸ் என்ற கன்னடப் படத்தில், கதாநாயகியாக அறிமுகமானர். முதல் படமே மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தது.
🌟 1958 ஆம் ஆண்டு மணாளனே மங்கையின் பாக்கியம் என்ற திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் சரோஜாதேவிக்கு ஒரு அங்கீகாரத்தைப் தேடித்தந்த படம், எம்.ஜி.ஆர் தயாரிப்பில் வெளிவந்த நாடோடி மன்னன் திரைப்படமாகும்.
🌟 திரைப்படத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்திய அரசால் இவருக்கு பத்மஸ்ரீ, மற்றும் பத்ம பூஷன் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல், தமிழக அரசால் எம்.ஜி.ஆர் விருது, ஆந்திர அரசால் என்.டி.ஆர் தேசிய விருதுகளை வாங்கியுள்ளார்.
🌟 2008-ல் வாழ்நாள் சாதனையாளருக்கான இந்திய அரசின் தேசிய விருது என மேலும் பல விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார்.
🌟 சைவத்துக்கும் தமிழுக்கும் பெரும் தொண்டாற்றிய தங்கம்மா அப்பாக்குட்டி 1925ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி யாழ்ப்பாணம் மாவட்டம், தெல்லிப்பழை என்ற ஊரில் பிறந்தார்.
🌟 தமிழையும் சைவ சமயத்தையும் முறையாக கற்று,1952-ல் பால பண்டிதராகத் தேர்ச்சி பெற்றார். 1958-ல் தமிழகத்தில் சைவப்புலவர் பட்டமும் பெற்றார்.
🌟 இவரது கந்தபுராண சொற்பொழிவு நூலுக்கு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. யாழ் பல்கலைக்கழகம் 1998-ல் இவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கியது.
🌟 சிவத்தமிழ்ச் செல்வி, திருவாசகக் கொண்டல், செஞ்சொற் செம்மணி, சிவஞான வித்தகி, துர்க்கா புரந்தரி உள்ளிட்ட ஏராளமான பட்டங்களையும் பல்வேறு விருதுகள், பரிசுகள், பதக்கங்களையும் பெற்றவர்.
🌟 தமிழுக்கும் ஏழை, எளியவர்களுக்கும் தொண்டாற்றிய தங்கம்மா அப்பாக்குட்டி தன்னுடைய 83-வது வயதில் (2008)மறைந்தார்.
Social Plugin