🌷 1862ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகத்தான ஆங்கில எழுத்தாளர் ஓ ஹென்றி, வட கரோலினாவில் உள்ள கிரீன்ஸ்போரோ என்னும் இடத்தில் பிறந்தார்.
🌷 1948ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி பாகிஸ்தானை உருவாக்கிய முகம்மது அலி ஜின்னா மறைந்தார்.
📻 2006ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி ஜெர்மனியின் முதலாவது 24 மணிநேர தமிழ் வானொலியான ஐரோப்பியத் தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்டது.
🌆 1893ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி முதலாவது உலக சமய நாடாளுமன்ற மாநாடு சிக்காகோவில் ஆரம்பமானது.
🌷 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நியூயார்க்கில் உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

🏁 சுதந்திரப் போராட்ட வீரரும், பூமிதான இயக்கத் தந்தையுமான ஆச்சார்ய வினோபா பாவே 1895ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள ககோடா என்ற கிராமத்தில் பிறந்தார்.
🏁 மகாராஷ்டிர தர்மா என்ற மாத இதழை 1923-ல் தொடங்கினார். கதர்ஆடை, கிராமத் தொழில்கள், கிராம மக்களின் கல்வி, சுகாதார மேம்பாட்டுக்காகவும், தீண்டாமை ஒழிப்புக்காகவும் பாடுபட்டார்.
🏁 தேவையுள்ளவர்கள் அதிகம் இருக்கும் இங்கு, கொடுக்கும் மனம் உள்ளவர்களும் நிறைய பேர் இருப்பதை புரிந்துகொண்ட வினோபா, இரு தரப்பினருக்கும் பாலமாக இருக்க முடிவு செய்தார். பூதான் எனப்படும் பூமிதான இயக்கத்தை தொடங்கினார். எனவே இவர் பூமிதான இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
🏁 இவர் 13 ஆண்டுகளில் நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மைல்கள் நடைபயணம் மேற்கொண்டார். சுமார் 40 லட்சம் ஏக்கர் நிலத்தை தானமாகப் பெற்றார். 1979-ல் உண்ணாவிரதம் இருந்து, பசுவதை தடைச் சட்டத்தை கொண்டுவரச் செய்தார்.
🏁 என்னைவிட காந்தியத்தை சிறப்பாக உள்வாங்கிக்கொண்டவர் என்று காந்திஜியால் புகழாரம் சூட்டப்பட்டவர். மக்களாலும் தலைவர்களாலும் ஆச்சார்யா என்று போற்றப்பட்ட வினோபா பாவே தனது 87-வது வயதில் (1982) மறைந்தார்.
🏆 LED விளக்கை கண்டுபிடித்த 3 விஞ்ஞானிகளுள் ஒருவரான ஜப்பான் நாட்டை சேர்ந்த அறிவியலாளர் ஹிரோசி அமானோ 1960ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி ஜப்பானில் பிறந்தார்.
🏆 இவர் 2014ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை இசாமு அக்காசாக்கி, சுச்சி நாக்காமுரா ஆகியோருடன் சேர்ந்து வென்றுள்ளார்.
🏆 இந்த நோபல் பரிசானது திறன்மிக்க நீலநிற ஒளியுமிழி அல்லது ஒளியீரி (Diode) என்னும் குறைக்கடத்திக் கருவியைக் கண்டுபிடித்தமைக்காக வழங்கப்பட்டது.
🌷 1921ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி தமிழ் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் மறைந்தார்.
Social Plugin