Type Here to Get Search Results !

ஏப்ரல் 12

👉 சர்வதேச விண்வெளி வீரர்கள் தினம்

👉 வீதியோர சிறுவர்களுக்கான சர்வதேச தினம்


🌷 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி இந்தியா அக்னி 3 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது.

🌷 1606ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி ஐக்கிய நாடுகள் கொடி, பிரிட்டனின் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.


சர்வதேச விண்வெளி வீரர்கள் தினம்

🚀 மனித விண்வெளி பயணத்திற்கான சர்வதேச தினத்தை உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஏப்ரல் 12ஆம் தேதி சர்வதேச விண்வெளி வீரர்கள் தினமாக (International Day of Human Space Flight) அனுசரிக்கப்படுகிறது.

🚀 இத்தினம் கொண்டாடுவதற்கு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றி, ரஷ்யாவினால் இதற்கான முன்மொழிவு கொண்டு வரப்பட்டது. இத்தினம் அனுசரிக்கப்படுவதற்கான காரணம், விண்வெளிக்கு பயணித்த முதலாவது மனிதனின் விண்வெளி பயணத்தை நினைவுகூறுவதற்காக தான்.

🚀 ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின் 1961ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி வஸ்டொக்-1 விண்கலத்தில் பயணம் செய்து 108 நிமிடங்கள் பூமியைச் சுற்றி வந்து பாதுகாப்பாக தரையிறங்கினார். யூரி ககாரின் நினைவாக ரஷ்யாவில் ஏப்ரல் 12ஆம் தேதி சர்வதேச விண்வெளி வீரர்கள் தின கொண்டாட்டம் ஆரம்பித்தது. அது இப்போது உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.


வீதியோர சிறுவர்களுக்கான சர்வதேச தினம்

👫 உலகெங்கும் கோடிக்கணக்கில் உள்ள வீதியோர சிறுவர்களின் நல்வாழ்வுக்கும், அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல்கொடுக்கும் தினமாக வீதியோர சிறுவர்களுக்கான சர்வதேச தினம் (International Day for Street Children) ஆண்டுதோறும் ஏப்ரல் 12ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

👫 இத்தினம் மொராக்கோ, உகாண்டா, எத்தியோப்பியா, குவாத்தமாலா, இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் உள்ள வீதியோர சிறுவர்களுக்காக கடைபிடிக்கப்படுகிறது. அத்துடன் ஐக்கிய இராஜ்ஜியம், அயர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் பள்ளிச் சிறுவர்களும் இத்தினத்தை கடைபிடிக்கின்றனர்.


டாம் கிளான்ஸி

🌷 உலகப் புகழ்பெற்ற உளவுத்துறை சார்ந்த நூல்களை படைத்த டாம் கிளான்ஸி (Tom Clancy) 1947ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி அமெரிக்காவின் மேரி லேண்ட் மாநிலம் பால்ட்டிமோரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் தாமஸ் லியோ கிளான்ஸி.

🌷 இவருக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசையிருந்தது. ஆனால், பார்வைக் குறைபாடு காரணமாக அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும், ராணுவம், பனிப்போர், அரசியல் களம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். எனவே, அவற்றை பற்றிய பல புத்தகங்களை படித்தார்.

🌷 இவர் ஓய்வு நேரங்களில் நாவல்கள் எழுதினார். இவரது 'தி ஹன்ட் ஃபார் ரெட் அக்டோபர்' என்ற நாவல் 1982ஆம் ஆண்டு வெளியானது. முதல் நாவலே விற்பனையில் சாதனை படைத்தது.

🌷 உலகம் முழுவதும் கோடிக்கணக்கான வாசகர்களை கொண்டு சாதனை படைத்த படைப்பாளிகளில் ஒருவராகப் போற்றப்படும் டாம் கிளான்ஸி தனது 66வது வயதில் (2013) மறைந்தார்.