👉 மலாலா தினம்
🌷 1854ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி ஒளிப்படச் சுருளைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஈஸ்ட்மன் பிறந்தார்.
👪 ஒவ்வொரு ஜூலை 12ம் தேதியும் “மலாலா தினம்” என்று அழைக்கப்படும் ஐ.நா. அனுசரிப்பு ஆகும்.இந்த நாள் பெண்கள் கல்வி சமமாக அணுக வேண்டும் என்று வாதிட்ட பாகிஸ்தானின் மலாலா யூசுஃப்ஸாயின் வாழ்க்கை மற்றும் போராட்டங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது
🌷 தமிழரின் திறமையை உலகிற்கு வெளிக்காட்டிய கூகுளின் CEO சுந்தர் பிச்சை அவர்கள் 1972ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி மதுரையில் பிறந்தார்.
🌷 இவர் 2004-ல் கூகுளில் இணைந்தார். பிறகு கூகுள் நிறுவனத்தால் தயாரிப்பு மேம்பாட்டு துறையில் துணை தலைவராகவும், Chrome and apps-ல் மூத்த துணை தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
🌷 2009-ஆம் ஆண்டு கூகுளின் Gmail and Google Maps போன்ற பல பயன்பாடுகளின் வளர்ச்சி குறித்து மேற்பார்வையிட அமர்த்தப்பட்டார். 2013-ல் சுந்தர் பிச்சை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பொறுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்.
🌷 மேலும், கூகுளின் தயாரிப்பு துறையில் தலைமை பொறுப்பில் (Product Chief) நியமிக்கப்பட்டார். ஆகஸ்ட், 2015ஆம் ஆண்டு கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
🌷 விடாமுயற்சியோடு போராடி வெற்றிப்பெற்ற தமிழன் என்ற பெருமைக்குரிய இவர் தனது 47வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
🌷 பெண் கல்வி உரிமைக்காக போராடிய உலக அடையாளச் சின்னம், மலாலா யூசஃப்சாய் 1997ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் பிறந்தார்.
🌷 மலாலா, 2013ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையை தொடர்பு கொண்டு உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வையே ஐக்கிய நாடுகள் மலாலா தினமாக அறிவித்தது.
🌷 பாகிஸ்தானில் சில பகுதிகளில் பெண்கள் படிக்கக்கூடாது, தெருக்களில் நடமாடக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. அதை எதிர்த்து இவர் போராடினார்.
🌷 இவர் பொது இடங்களிலும், பெண்கல்வி குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தினார். எனவே, இவரை தலிபான் பயங்கரவாதிகள் சுட்டதில் படுகாயமடைந்தார். சிகிச்சைக்கு பிறகு ஆபத்தான நிலையிலிருந்து அவர் உயிர் பெற்றார்.
🌷 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பாகிஸ்தானியப் பெண் மற்றும் மிக இளையவள் என்ற பெருமையை கொண்ட மலாலா தனது 22வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
Social Plugin