Type Here to Get Search Results !

மே 12

👉 சர்வதேச செவிலியர் தினம்

👉 ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம்


🌷 1895ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி சிறந்த தத்துவ ஆசிரியர், பேச்சாளர், எழுத்தாளரான ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ஆந்திர மாநிலம் சித்தூரில் பிறந்தார்.

🌷 1949ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி சோவியத் ஒன்றியம், பெர்லின் மீதான முற்றுகையை நிறுத்தியது.

🌷 1881ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி வடஆப்பிரிக்காவில் துனீசியா, பிரான்சின் நேரடி ஆட்சியின் கீழ்வந்தது.



சர்வதேச செவிலியர் தினம்

💉 சர்வதேச செவிலியர் தினம் மே 12ஆம் தேதி 1965ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது. இத்தினம் அர்ப்பணிப்புடனும், சேவை மனப்பான்மையுடனும் செவிலியர்கள், நம் சமூகத்திற்கு ஆற்றிவரும் சிறப்பான பங்களிப்பை நன்றியுடன் நினைவுகூற கடைபிடிக்கப்படுகிறது.

💉 மேலும், செவிலியர்கள் பின்பற்ற வேண்டிய நவீன நடைமுறைகளை உருவாக்கி தந்தவரான ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.


ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல்

💊 செவிலியர்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாக திகழும் ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) 1820ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் நகரில் பிறந்தார்.

💊 இவர் 1850-ல் லண்டனில் பணிபுரிந்தபோது ரஷ்யப் பேரரசுக்கும், பிரட்டிஷ் பேரரசுக்கும் இடையே ஏற்பட்ட போரில் காயமடைந்த வீரர்களுக்காக சேவையாற்றினார்.

💊 இரவில் கையில் ஒரு விளக்கை ஏந்தியபடியே எல்லா வார்டுகளையும் ஒருமுறை சுற்றிப் பார்த்துவிட்டு நோயாளிகள் அனைவரும் அமைதியாக உறங்குவதை உறுதி செய்த பிறகே இவர் உறங்க செல்வார். அதனால்தான் வரலாறு இவரை விளக்கேந்திய நங்கை (The Lady with the Lamp) என்று நினைவில் வைத்திருக்கிறது.

💊 இவர் 1883-ல் விக்டோரியா அரசியிடமிருந்து அரச செஞ்சிலுவை விருது பெற்றார். 1907-ல் ஆர்டர் ஆஃப் மெரிட் (Order of Merit) எனும் விருதையும் பெற்றார். இவர் இவ்விருதைப் பெற்ற முதல் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.

💊 இறுதிவரை சேவை மனப்பான்மையுடன் பணியாற்றிய இவர் தனது 90வது வயதில் (1910) மறைந்தார்.