🌷 1981ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி புகழ்பெற்ற இந்தியக் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சண்டிகரில் பிறந்தார்.
🌷 1931ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி பிரபல குணச்சித்திர நடிகை சௌகார் ஜானகி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்தார்.
🌷 1931ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி பிரபல குணச்சித்திர நடிகை சௌகார் ஜானகி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்தார்.
🌷 சர்வதேச கன உலோக தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 12ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகிறது.
🌷 இத்தினத்தில் சிறந்த மற்றும் மிகப்பெரிய கன உலோகங்களினால் வாசிக்கப்பட்ட ஆல்பங்கள் வெளியிடப்படுகிறது. வீடுகள், வேலை செய்யும் இடங்கள், கார் ஆகியவற்றிலும் இச்சிறந்த இசையைப் பயன்படுத்த வலியுறுத்துகின்றனர். இத்தினம் ஐயர்ன் மேத்யூ என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.
🌷 டிசம்பர் 12ஆம் தேதி சர்வதேச கரலாகட்டை தினம் கொண்டாடப்படுகிறது. தமிழரின் உடற்பயிற்சி கலையான கரலாகட்டையை உலகம் முழுவதும் கொண்டு செல்வது மற்றும் கரலாகட்டையை ஒலிம்பிக் விளையாட்டாக இடம் பெறச் செய்வதே இத்தினத்தின் நோக்கமாகும்.
🌷 சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், 1950ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி பெங்களூரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் சிவாஜி ராவ் கைக்வாட்.
🌷 ஆரம்பத்தில் பல இன்னல்களை சந்தித்த ரஜினிகாந்த் அவர்கள் ஒரு நண்பரின் உதவியால் 'சென்னை திரைப்படக் கல்லூரியில்' சேர்ந்தார். 1975ஆம் ஆண்டு, கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த 'அபூர்வ ராகங்கள்' என்ற திரைப்படத்தில், ஒரு சிறிய வேடத்தில் திரையுலக வாழ்க்கையை தொடங்கினார்.
🌷 ரஜினிகாந்த் அவர்கள், தமிழ்மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி, பெங்காலி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
🌷 இவர் தமிழக அரசு திரைப்பட விருது, கலைமாமணி விருது, எம்.ஜி.ஆர் விருது, தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, பத்ம பூஷண் போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.
Social Plugin