👉 உலக மாலைக்கண் நோய் தினம்
🌷 1788ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி நியூயார்க் நகரம், அமெரிக்காவின் தற்காலிக தலைநகராக அறிவிக்கப்பட்டது.
🎆 1898ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி ஹனிபல் குட்வின், செலுலாயிட் புகைப்பட சுருளைக் கண்டுபிடித்தார்.
👍 1948ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி இந்தியப் படைகள் ஐதராபாத்தை இந்திய ஆளுமையின் கீழ் கொண்டு வந்தன.
🎆 1898ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி ஹனிபல் குட்வின், செலுலாயிட் புகைப்பட சுருளைக் கண்டுபிடித்தார்.
👍 1948ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி இந்தியப் படைகள் ஐதராபாத்தை இந்திய ஆளுமையின் கீழ் கொண்டு வந்தன.
🍫 உலகமெங்கும் சர்வதேச சாக்லேட் தினம் செப்டம்பர் 13ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மில்டன் எஸ்.ஹெர்ஷே என்பவர், கார்மெல் கேண்டி சாக்லேட்டை 1880-ம் ஆண்டு கண்டுபிடித்தார். 1990-ம் ஆண்டு அந்த சாக்லேட்டிற்கு புது வடிவம் கொடுக்கப்பட்டது. இவருடைய பிறந்த நாளை சாக்லேட் தினமாக கொண்டாடுகிறோம்.
🍫 தொடர்ந்து சாக்லேட் எடுத்துக் கொள்வதால் பக்கவாத பாதிப்பு 21 சதவீதமும், இருதயம் தொடர்பான நோயில் இருந்து 29 சதவீதமும், இருதய நோயால் உயிரிழப்பதில் இருந்து 45 சதவீதமும் பாதுகாப்பு கிடைக்கிறது என மருத்துவ ரீதியான ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது.
👀 ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 13ஆம் தேதி உலக மாலைக்கண் நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நோய் வைட்டமின் ஏ குறைபாட்டினால் ஏற்படுகிறது. மாலைக்கண் நோய் உள்ளவர்கள் பிரகாசமான வெளிச்சம் இருந்தால் மட்டுமே அவர்களால் நன்றாகப் பார்க்க முடியும்.
👀 சூரிய ஒளிக்கு மட்டுமே அந்த சக்தி உள்ளது. சூரிய ஒளிக்கு குறைந்த வெளிச்சத்தில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் விழித்திரை செல்கள் அவர்களுக்கு மிகவும் குறைவாக இருப்பதால் சூரியன் மறைந்த உடனேயே அவர்களுடைய பார்வை மங்கிப் போய்விடுகிறது.
🌷 வங்காள எழுத்தாளரும், பன்மொழி அறிஞருமான சையது முஜ்தபா அலி 1904ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி வங்காள மாகாணத்தின் கரீம்கஞ்ச் நகரில் (தற்போது அசாமில் உள்ளது) பிறந்தார்.
🌷 வங்காள மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட இவர் பிரெஞ்ச், அரபி, பாரசீகம், உருது, இந்தி, சமஸ்கிருதம், மராத்தி, குஜராத்தி, ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் நிபுணராகத் திகழ்ந்தார்.
🌷 சொந்த வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு வங்காள மொழியில் பல கதைகளை எழுதினார். இவரது தனித்துவமான பாணியால் இக்கதைகள் மிகவும் பிரபலமடைந்தன. தேஷெ பிதேஷெ, ரம்ய ரசனா, பஞ்சதந்த்ரா ஆகியவை இவரது சிறந்த படைப்புகள். தனது உலக சுற்றுப்பயண அனுபவம் குறித்து 1948-ல் தேஷ் பத்திரிகையில் எழுதினார்.
🌷 நரசிங்கதாஸ் விருது, ஆனந்த புரஸ்கார் உட்பட பல விருதுகளைப் பெற்றார். கால, தேச, மத, மொழி எல்லைகளுக்கு அப்பாற்பட்ட படைப்பாளியான சையத் முஜ்தபா அலி 70-வது வயதில் (1974) மறைந்தார்.
Social Plugin