Type Here to Get Search Results !

ஜூன் 13

👉 ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் பிறந்த தினம்


🌷 1965ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வீரர் மனிந்தர் சிங் (Maninder Singh) புனேயில் பிறந்தார்.

🌷 1955ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி சோவியத் ஒன்றியத்தில் முதலாவது வைரச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

🌷 1983ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி பயனியர் 10(Pionner- 10), சூரியக் குடும்பத்தை தாண்டிய முதலாவது விண்கலம் (spacecraft) ஆனது.


பான் கி மூன்

🌷 ஐ.நா.வின் 8வது பொதுச் செயலாளரான பான் கி மூன் 1944ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி கொரியாவில் பிறந்தார்.

🌷 இவர் ஐ.நா.வின் பொதுச் செயலாளராக 2007ஆம் ஆண்டு பதவியேற்றார். அடுத்தடுத்து இரண்டு முறை ஐ.நா. பொதுச் செயலாளராக பணியாற்றியுள்ள இவரின் பதவிக்காலம் 2016-ம் ஆண்டு டிசம்பர் 31-ல் நிறைவடைந்தது.

🌷 தென்கொரியாவின் இந்தியத் தூதரகத்தில் முதன்முதலாக பணியில் சேர்ந்த இவர் கொரிய வெளியுறவுத்துறையின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

🌷 பத்து ஆண்டுகளாக ஐ.நா.வை வழிநடத்திய இவர் தனது 74வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.


ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல்

🌷 கோட்பாட்டு இயற்பியலாளரான ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் (James Clerk Maxwell) 1831ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்கில் பிறந்தார்.

🌷 இவர் மின்காந்தவியல் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு முதன்முதலில் மின்காந்த அலைகள் இருப்பதற்கான ஆதாரங்களைப் பரிசோதனை மூலம் நிரூபித்தார். மேலும் 1865-ல் மின்காந்தவியல் கோட்பாட்டை உருவாக்கினார்.

🌷 வாயுக்களின் இயக்கக் கோட்பாட்டை (kinetic theory of gases) விளக்குவதற்காக புள்ளியியல் முறையை உருவாக்கினார். இது Maxwell-Boltzmann distribution எனக் குறிப்பிடப்படுகிறது.

🌷 தன் வாழ்நாளின் இறுதிவரை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தவரும், தலைசிறந்த விஞ்ஞானியுமான ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல், தனது 48வது வயதில் (1879) மறைந்தார்.