Type Here to Get Search Results !

ஏப்ரல் 14

👉 உலக சித்தர்கள் தினம்

👉 தேசிய தீயணைப்பு சேவை தினம்

👉 டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம்


🌷 1963ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி இந்திய மதகுரு ராகுல் சாங்கிருத்யாயன் மறைந்தார்.

🌷 1950ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதி ரமண மகரிஷி மறைந்தார்.

🌷 1962ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி இந்தியப் பொறியியலாளர் எம்.விஸ்வேஸ்வரய்யா மறைந்தார்.


உலக சித்தர்கள் தினம்

🌷 உலக சித்தர்கள் தினம் ஏப்ரல் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினம் 2009ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டது.

🌷 சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வகையிலும், சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.


தேசிய தீயணைப்பு சேவை தினம்

🌺 பொதுமக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும் பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து கொண்டிருக்கும் தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கும் விதமாகவும், பணியின் போது உயிர் இழந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் ஏப்ரல் 14ஆம் தேதி இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.


தீத்தடுப்பு தினம்

🌷 தீ விபத்தினால் உயிர்ச்சேதம், பொருட்சேதம், காயமடைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆகவே, தீ ஏற்பட்டால் அதனைத் தடுத்து, கட்டுப்படுத்துவது சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே தீத்தடுப்பு தினம் ஏப்ரல் 14ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.


டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

🌷 இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கும் அம்பேத்கர் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மாவ் (தற்போது மத்தியபிரதேசம்) என்ற இடத்தில் பிறந்தார்.

🌷 இவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்ததால் பலமுறை துயரங்களை அனுபவித்தார். ஆனால், மகாதேவ அம்பேத்கர் என்ற ஆசிரியர் இவர் மீது பாசமாக இருந்ததால் பீம்ராவ் சக்பால் அம்பாவடேகர் என்ற பெயரை, பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்றிக்கொண்டார்.

🌷 உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு உரியவர். பிறகு 1923ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த பிறகு ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பஹிஸ்கிருத ஹிதகாரிணி சபா என்ற அமைப்பை நிறுவினார்.

🌷 1930ஆம் ஆண்டு தொடங்கிய நாசிக் கோயில் நுழைவு போராட்டத்தினை நடத்தி வெற்றிக்கண்டார்.

🌷 தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளியாய், ஈடுஇணையற்ற ஜோதியாய் விளங்கிய பி.ஆர்.அம்பேத்கர் தனது 65வது வயதில் (1956) மறைந்தார். இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1990ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.