👉 சார்லஸ் சாப்ளின் பிறந்த தினம்
🌷 1867ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி விமானத்தைக் கண்டறிந்தவர்களில் ஒருவரான வில்பர் ரைட் இண்டியானாவிலுள்ள மில்வில்லே என்ற இடத்தில் பிறந்தார்.
🌷 1853ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி இந்தியாவின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது.
🌷 1966ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் ஆரம்பமானது.
🌷 1853ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி இந்தியாவின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது.
🌷 1966ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் ஆரம்பமானது.
🌷 ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 16ஆம் தேதி உலக குரல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. குரல் என்பது அனைத்து மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் ஒரு மகத்தான முக்கியத்துவத்தை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பிரேசிலியன் காது மூக்கு தொண்டை மற்றும் குரல் சங்கத்தால் 1999ஆம் ஆண்டு முதன்முதலாக இத்தினம் தொடங்கப்பட்டது.
🌷 தலைசிறந்த சமூக சீர்திருத்தவாதியும், தெலுங்கின் முதல் நாவலை எழுதியவருமான கந்துகூரி வீரேசலிங்கம் (Kandukuri Veeresalingam) 1848ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி ஆந்திரப்பிரதேசம் ராஜமுந்திரியில் பிறந்தார். இவரது முழுப்பெயர் கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு.
🌷 இவர் ஜாதி அமைப்புகளை, குழந்தைத் திருமணங்களை, முதிய வயதில் இளம் பெண்ணை மணக்கும் வழக்கங்களை எதிர்த்தார். கீழ்த்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகவும், பெண் கல்விகாகவும் பாடுபட்டார்.
🌷 இந்தியாவில் விதவைத் திருமணத்தை 1887ஆம் ஆண்டு நடத்தி வைத்தார். இவர் எழுதிய ராஜசேகரா சரித்ரா என்ற நாவல் தெலுங்கில் எழுதப்பட்ட முதல் நாவல்.
🌷 தெலுங்கு இலக்கியத்தின் மகத்தான கவிஞர், நவீன ஆந்திரத்தின் தீர்க்கதரிசி கந்துகூரி வீரேசலிங்கம் 71வது வயதில் (1919) மறைந்தார்.
🌷 உலகுக்கே நம்பிக்கையையும் நகைச்சுவை வழியாக தந்த சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Sir Charles Spencer Chaplin) 1889ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி லண்டனில் உள்ள வால்வோர்த் என்ற இடத்தில் பிறந்தார்.
🌷 1912ஆம் ஆண்டு லண்டன் நகரில் உள்ள நாடகக் குழு மூலமாக சென்ற அமெரிக்கப் பயணம் இவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது.
🌷 பிறகு இவரை கீ ஸ்டோன் சினிமா நிறுவனத் தயாரிப்பாளர் தனது நிறுவனத்தில் சேர்த்துக்கொண்டார். இவர் நடித்த முதல் மௌனத் திரைப்படம் மேக்கிங் ஏ லிவிங் 1914ஆம் ஆண்டு வெளிவந்தது.
🌷 ஒரே வருடத்தில் 35 திரைப்படங்களில் நடித்தார். அனைத்துமே சாதனை படைத்தன. 1936ஆம் ஆண்டு பேசும் படக்காலம் தொடங்கியது. மாடர்ன் டைம்ஸ் என்ற பேசும் படம் தயாரித்தார். இதில் இவர் பேசாமல்தான் நடித்தார்.
🌷 இரண்டு முறை ஆஸ்கர் சிறப்பு விருதுகளை வென்றுள்ளார். உலகையே சிரிக்க வைத்த இவர் 88வது வயதில் (1977) மறைந்தார்.
Social Plugin