👉 எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்த தினம்
🌷 1852ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் உலகின் முதலாவது இலவச நூல் நிலையம் அமைக்கப்பட்டது.
🌷 1963ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி மலேசியா நாடு உருவாக்கப்பட்ட தினம்.
🌷 1963ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி மலேசியா நாடு உருவாக்கப்பட்ட தினம்.
🌀 பூமிக்கு கவசம் போல இருக்கும் இந்த ஓசோன் படலத்தின், அடர்த்தி குறைந்து ஓட்டை விழ ஆரம்பித்து விட்டதாக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்டது.
🌀 முதலில் அண்டார்டிகா பகுதியில் ஓசோன் அடர்த்தியை அளக்கும் டாப்சன் அலகில் பார்த்த போது அடர்த்தி குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து 1987ஆம் ஆண்டு ஓசோன் படலம் குறித்த சர்வதேச மாநாடு நடத்தப்பட்டது.
🌀 ஐ.நா.சபையானது, செப்டம்பர் 16ஆம் தேதியை உலக ஓசோன் தினம் (அ) உலக ஓசோன் பாதுகாப்பு தினமாக அறிவித்தது. ஓசோன் படலத்தில் ஏற்படும் பாதிப்பை தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்க உலக நாடுகளுக்கு வலியுறுத்தப்பட்டது.
🌀 ஓசோனை பாதுகாக்க நாம் ஒவ்வொருவரும் உறுதி மொழி எடுத்து நம்முடைய நடவடிக்கைகள் ஓசோன் மண்டலத்தை பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும்.
🎶 ராகம் பாடி ஈட்டிய பெருஞ்செல்வத்தை தானமாக நற்பணிகளுக்கும், சமூக சேவைக்கும் கொடுத்த ஒப்பற்ற இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி 1916ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி மதுரையில் பிறந்தார்.
🎶 1926-ல் வெளியிடப்பட்ட ஒரு எல்.வி. இசைத்தட்டில் மரகத வடிவும் செங்கதிர் வேலும் என்னும் பாடலில் சண்முகவடிவின் வீணையும், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாட்டும் இணைந்து வெளிவந்தது. தி ட்வின் ரிகார்டிங் கம்பெனி இதை வெளியிட்டது. இதுதான் இவரது முதல் இசைத்தட்டு.
🎶 இவருக்கு பத்ம பூஷன், சங்கீத நாடக அகாடமி விருது, சங்கீத கலாநிதி, இசைப்பேரறிஞர் விருது, பத்ம விபூஷண், சங்கீத கலாசிகாமணி விருது, காளிதாஸ் சம்மன் விருது, பாரத ரத்னா மற்றும் மக்சேசே பரிசு போன்ற பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
🎶 1966ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி உலக அமைதியை வலியுறுத்தி மூதறிஞர் ராஜாஜி எழுதிய மே தி லார்ட் பர்கிவ் அவர்சின்ஸ் என்னும் ஆங்கிலப் பாடலை எம்.எஸ்.சுப்புலட்சுமி ஐ.நா.சபையில் பாடினார். எம்.எஸ்.சுப்புலட்சுமி 2004ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி சென்னையில் மறைந்தார்.
💉 வைட்டமின் சி-யை கண்டுபிடித்தவரும் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஹங்கேரி ஆராய்ச்சியாளருமான ஆல்பர்ட் ஸென்ட் ஜியார்ஜி 1893ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் பிறந்தார். செல்கள், வைட்டமின் சி, அஸ்கார்பிக் அமிலத்தின் வேதியியல் மாற்றங்கள் குறித்த கண்டுபிடிப்புகளுக்காக 1937-ல் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
💉 கேமரான் பரிசு, லாஸ்கல் விருது உட்பட பல விருதுகள், பரிசுகளைப் பெற்றுள்ளார். இறுதிவரை மனிதகுல நல்வாழ்வுக்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட ஆல்பர்ட் ஸென்ட் ஜியார்ஜி தனது 93-வது வயதில் (1986) மறைந்தார்.
Social Plugin