🌷 1955ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி கலிஃபோர்னியாவில் டிஸ்னிலாந்தின் துவக்க நிகழ்வுகள் தொலைக்காட்சி மூலம் காண்பிக்கப்பட்டது.
🌷 1975ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலமும், சோவியத்தின் சோயுஸ் விண்கலமும் விண்வெளியில் ஒன்றாக இணைந்தன. இரண்டு நாடுகளின் விண்கலங்கள் ஒன்றாக இணைந்தது இதுவே முதற்தடவையாகும்.
🌷 1953ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவடைந்தது.
🌷 1975ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலமும், சோவியத்தின் சோயுஸ் விண்கலமும் விண்வெளியில் ஒன்றாக இணைந்தன. இரண்டு நாடுகளின் விண்கலங்கள் ஒன்றாக இணைந்தது இதுவே முதற்தடவையாகும்.
🌷 1953ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவடைந்தது.
🌷 சர்வதேச உலக நீதி தினம் 2010ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
🌷 சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இத்தினம் தேர்வு செய்யப்பட்டது. இத்தினத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள், இனப்படுகொலை போன்ற பிரச்சனைகள்மீது விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
🌷 கிராமத்து எழிலோடு மண்வாசனை மாறாமல் தன்னுடைய கற்பனையை விருந்தளித்த இயக்குனர் இமயம் பாரதிராஜா 1941ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி தேனி அல்லி நகரில் பிறந்தார். இவரது இயற்பெயர் சின்னச்சாமி.
🌷 சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வந்த இவர், சினிமா மேலிருந்த ஈடுபட்டால் சென்னைக்குப் புறப்பட்டு வந்து, அங்கே இளையராஜா, கங்கை அமரன், ஆர்.செல்வராஜ் ஆகியோருடன் தங்கியிருந்தார்.
🌷 இவரது நண்பர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மூலம் திரையுலக அறிமுகம் கிடைத்து, இயக்குநர் பி.புல்லையாவிடம் உதவியாளராக சேர்ந்தார். பின்னர் பிரபல கன்னட இயக்குநர் புட்டண்ணாவிடம் சேர்ந்து சினிமா நுணுக்கங்களை கற்றார்.
🌷 1978ல் இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் படமான 16 வயதினிலே, மாபெரும் வெற்றியை தந்தது. அதை தொடர்ந்து சிகப்பு ரோஜாக்கள், கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை, மண் வாசனை, முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், கருத்தம்மா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார்.
🌷 இவர் பத்மஶ்ரீ, 6 முறை தேசிய விருதுகள், 3 முறை மாநில அரசு விருதுகள், ஆந்திரப் பிரதேசத்தின் நந்தி விருது, ஃபிலிம் ஃபேர் விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.
🌷 தமிழ் திரைப்படத்துறையில் புரட்சியை ஏற்படுத்திய பாசத்துக்குரிய பாரதிராஜா இன்று 76வது வயதை நிறைவு செய்கிறார்.
🌷 பிரபஞ்ச விரிவாக்க கோட்பாட்டை முதன்முதலில் வெளியிட்ட ஜார்ஜஸ் ஹென்றி ஜோசப் எடுவர்ட் லிமேட்டர் (Georges Henri Joseph Edouard Lemaitre) 1894ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி பெல்ஜியம் நாட்டின் சாலர்வ் நகரில் பிறந்தார்.
🌷 இவர் பிரபஞ்சம் விரிவடைகிறது என்ற ஹபிள் விதியை (Hubbles law) எட்வின் ஹப்பிள் கூறுவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே 1927-ல் இவர் வெளியிட்டார்.
🌷 காஸ்மிக் எக் என இவர் கண்டறிந்த கோட்பாடுதான் பின்னாளில், பெரு வெடிப்புக் கோட்பாடு என்ற பெயரில் பிரபலம் அடைந்தது. பிரபஞ்ச விரிவாக்கம் குறித்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து, விரிவான கட்டுரைகளை 1933-ல் வெளியிட்டார்.
🌷 பிரபஞ்சவியல் கணக்கீடுகளுக்கு கணினியைப் பயன்படுத்துவதில் முன்னோடியாகத் திகழ்ந்த ஜார்ஜஸ் லிமேட்டர் 72வது வயதில் (1966) மறைந்தார்.
Social Plugin