Type Here to Get Search Results !

பிப்ரவரி 18

👉 இராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த தினம்


💣 1967ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி அணுகுண்டை கண்டுபிடித்த ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் மறைந்தார்.

🌷 1911ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி முதலாவது அதிகாரப்பூர்வமான விமான அஞ்சல் சேவை இந்தியாவின் அலகாபாத்தில் ஆரம்பமானது.


ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர்

✋ இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞான ஒளியாய் திகழ்ந்த ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் 1836ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி, இந்தியாவின் மேற்குவங்காள மாநிலத்தில் ஹூக்லி மாவட்டத்திலுள்ள காமர்புகூர் என்ற இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் காதாதர் சட்டோபாத்யாயர்.

✋ பொருளாதார நிலை காரணமாக, தன்னுடைய சிறு வயதில் கொல்கத்தாவிற்கு வேலைத் தேடி சென்றார் இராமகிருஷ்ண பரமஹம்சர். அங்கே தன்னுடைய அண்ணனுக்கு உதவியாக கோவிலில் வேலைப் பார்த்து வந்தார். அவர் இறந்தவுடன் அதே காளி கோவிலின் பூசாரியானார்.

✋ இவர் ஆன்மீகச் சிந்தனைகளை உலகெங்கும் பரப்பினார். இவருடைய சீடர்களுள் ஒருவர் நரேந்தரநாத் தத்தா என அழைக்கப்பட்ட சுவாமி விவேகானந்தர் ஆவார்.

✋ 'கடவுள் ஒருவரே, வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடவுளை அடைவதற்கான பல வழிகள்' என்பதை தெளிவுப்படுத்திய இராமகிருஷ்ண பரமஹம்சர் 1886ஆம் ஆண்டு தனது 50வது வயதில் மறைந்தார்.


அலெசான்றோ வோல்ட்டா

💡 மின்துறை என்ற ஒரு துறை உண்டாவதற்கு வழிகாட்டியாக இருந்த அலெசான்றோ வோல்ட்டா 1745ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார்.

💡 1775ஆம் ஆண்டு மின் ஏற்பை உருவாக்கும் எலெக்ட்ரோஃபோரஸ் (electrophorus) என்னும் கருவியைக் கண்டுபிடித்தார். 1776ஆம் ஆண்டு மீத்தேனை கண்டுபிடித்தார். 1800ஆம் ஆண்டுகளில் முதல் மின்கலத்தை உருவாக்கினார்.

💡 வோல்ட் என்னும் மின்னழுத்த அலகானது இவருடைய பங்களிப்பை பெருமை செய்யவும், நினைவுக்கூறவுமே வைக்கப்பட்டது. இதனாலேயே மின்னழுத்தத்தை அளக்கும் கருவியை வோல்ட்டளவி (Voltmeter) என்று அழைக்கின்றோம்.

💡 முன்னோடி அறிவியல் அறிஞர்களில் ஒருவரான அலெசான்றோ வோல்ட்டா 82வது வயதில் (1827) மறைந்தார்.