Type Here to Get Search Results !

டிசம்பர்19

👉 பிரதீபா பாட்டில் பிறந்த தினம்


🌷 1927ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ராம் பிரசாத் பிசுமில் மறைந்தார்.

🌷 2014ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.பாலசுப்ரமணியன் மறைந்தார்.

🌷 1946ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி முதல் இந்தோ-சீன போர் துவங்கியது.


பிரதீபா பாட்டில்

🌷 இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவர் திருமதி.பிரதீபா தேவிசிங்க் பாட்டில் அவர்கள் மகாராஷ்டிராவிலுள்ள ஜல்கோன் மாவட்டத்தில் இருக்கும் நத்கோன் என்ற கிராமத்தில் 1934ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி பிறந்தார்.

🌷 இவர் ஜல்கோன் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு பயிற்சி வழக்கறிஞராக தனது வாழ்க்கையை தொடங்கினார். இவரது 27வது வயதில், இவர் ஜல்கோன் சட்டமன்ற தொகுதியிலிருந்து, மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

🌷 நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக, இவர் எட்லாபாத் (முக்தாய் நகர்) தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், அரசின் பல்வேறு பதவிகளிலும், மகாராஷ்டிரா சட்டமன்றத்திலும் வெவ்வேறு பதவிகள் வகித்துள்ளார்.

🌷 1967ஆம் ஆண்டு முதல் 1972ஆம் ஆண்டு வரை, கல்வித் துணை அமைச்சராகப் பணியாற்றிய இவர், பொது சுகாதாரத்துறையிலிருந்து சுற்றுலாத்துறை, பாராளுமன்ற விவகாரத் துறை போன்ற பல அமைச்சர் பதவிகளிலும் செயல்பட்டார்.

🌷 இவர் நவம்பர் 8, 2004 அன்று ராஜஸ்தான் கவர்னராகப் பொறுப்பேற்று, ஜூன் 2007 வரை அப்பதவியில் இருந்தார். பின்பு ஜூலை 25, 2007ஆம் ஆண்டு முதல் ஜூலை 25, 2012ஆம் ஆண்டு வரை இந்தியாவின் 12வது குடியரசு தலைவராகப் பதவி வகித்தார்.


ருடால்ஃப் ஹெல்

🌷 வீடியோ கேமரா ட்யூபை கண்டுபிடித்த ருடால்ஃப் ஹெல் 1901ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.

🌷 ஓரிடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்கு செய்திகளை அனுப்ப பயன்படுத்தும் தொலைநகல் சாதனத்தின் முன்னோடியான ஹெல்ஷ்ரீபர் (Hellschreiber) என்ற கருவியை 1920ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். ஃபேக்ஸ், டெலக்ஸ், கலர் ஸ்கேனர் ஆகியவற்றுக்கு இச்சாதனமே முன்னோடியாக திகழ்ந்தது.

🌷 இவரது 'ஹெல் ரெக்கார்டர்' கருவி, தகவல் தொடர்பு துறையில் பெரும் வரவேற்பை பெற்றதால், 1929ஆம் ஆண்டு சொந்த நிறுவனம் தொடங்கினார். இவர் 1932ஆம் ஆண்டு எலக்ட்ரோ மெக்கானிக்கல் ஹெலிகல் ஸ்கேன் பிரிண்ட் சிஸ்டம் என்ற கருவியைக் கண்டுபிடித்தார்.

🌷 வியன்னா போட்டோகிராஃபிக் சொசைட்டியின் தங்கப்பதக்கம் உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார். தொலைத்தொடர்பு துறையின் ஆசானாக போற்றப்படும் ருடால்ஃப் ஹெல் தன்னுடைய நூறாண்டு வாழ்க்கையைப் பூர்த்தி செய்து 2002ஆம் ஆண்டு மறைந்தார்.