👉 திமீத்ரி மெண்டெலீவ் மறைந்த தினம்
🌷 1896ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வெள்ளலூர் அண்ணாச்சாமி சுந்தரம் கோயமுத்தூரில் உள்ள வெள்ளலூர் கிராமத்தில் பிறந்தார்.
🌷 1790ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி வீரபாண்டிய கட்டபொம்மன் 47வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
🌷 1790ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி வீரபாண்டிய கட்டபொம்மன் 47வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
🌷 ஈரநிலங்களைப் பாதுகாப்பதன் மூலம் பல்லுயிர் வளங்கள் மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி 1971ஆம் ஆண்டில் ஈரான் நாட்டின் கரீபியன் கடற்பகுதியில் ராம்சர் (Ramsar) என்னுமிடத்தில் ஈரநிலங்களைப் பாதுகாத்தல் சம்பந்தமாக நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
🌷 இதனைக் கருத்தில் கொண்டே ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2ஆம் தேதி அன்று சர்வதேச அளவில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் ஏறக்குறை 1112 ஈரநிலப்பகுதிகள் காணப்படுவதுடன் அவை மொத்தமாக 89.37 மில்லியன் ஹெக்டர் நிலப்பகுதிகளைக் கொண்டிருக்கின்றன.
🌷 சுற்றுலா தலங்களை உருவாக்குதல், ரியல் எஸ்டேட் தொழில்கள் ஆகியனவும் நமது நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளும், பராமரிப்பு இன்மையும் இந்த நிலங்களை பாழ்படுத்திவருகிறது. எனவே, இந்த நிலங்களை பாதுகாக்கவும் அதன் பயன்களை மக்களிடம் கொண்டு செல்லவும் இந்த தினத்தை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
🌷 சிறந்த தமிழ் அறிஞரும், பொறியியலாளருமான பா.வே.மாணிக்க நாயக்கர் 1871ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி சேலம் மாவட்டம் பாகல்பட்டியில் பிறந்தார்.
🌷 இவர் 1896ஆம் ஆண்டு பொதுப்பணித் துறையில் கட்டுமானப் பொறியாளராக சேர்ந்தார். தமிழ் எழுத்துக்களைக் கொண்டு உலகின் அனைத்து மொழிகளில் உள்ள சொற்களையும் எழுத முடியும் என்று நிரூபித்தார்.
🌷 தமிழுக்கென தனி பல்கலைக்கழகம் உருவாக வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியவர். இவர் பல நூல்களை எழுதியுள்ளார். தமிழ் வேர்ச் சொற்களில் இருந்து பல அறிவியல் சொற்களை உருவாக்கிப் பயன்படுத்தினார்.
🌷 பொறியியல் துறையில் 60-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை கண்டறிந்த இவர் தனது 60வது வயதில் (1931) மறைந்தார்.
🌷 தனிம வரிசை அட்டவணையின் தந்தை என அழைக்கப்படும் திமீத்ரி மெண்டெலீவ் 1834ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி ரஷ்யாவிலுள்ள சைபீரியாவில் தோபோல்ஸ்க் என்ற இடத்தில் பிறந்தார்.
🌷 இவர் வேதியியலின் தத்துவங்கள் (1868-1870) என்ற நூலை எழுதினார். பிறகு வேதியியல் தனிமங்களை அவற்றின் பண்புகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தாமல், தனிமங்களின் அணு நிறையை அடிப்படையாகக்கொண்டு ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கினார்.
🌷 இதனை மார்ச் 6ஆம் தேதி 1869ஆம் ஆண்டு ரஷ்ய வேதியியல் கழகத்தில் சமர்ப்பித்தார். மேலும் அந்த அட்டவணையில் பல கண்டுபிடிக்கப்படாத தனிமங்களின் இயல்புகளை எதிர்வு குறி கொண்டு அட்டவணையை முழுமைப்படுத்தியிருந்தார்.
🌷 தனிமங்களின் இயல்புகளை வரையறுத்து குறிப்பிடத்தக்க சாதனையை செய்த மெண்டெலீவ் தனது 72வது வயதில் 1907ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி மறைந்தார்.
Social Plugin