👉 மரபியலின் தந்தை கிரிகோர் மெண்டல் பிறந்த தினம்
🌷 உலக வரலாற்றில் பெரும் வெற்றிகளைப் பெற்ற இராணுவத் தலைவர்களில் ஒருவரான கிரேக்க மன்னன் மாவீரர் அலெக்சாண்டர் கி.மு 356ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி பிறந்தார்.
📻 வானொலியை கண்டுபிடித்த மார்க்கோனி 1937ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி மறைந்தார்.
🌷தற்காப்புக்கலை நிபுணரும், ஹாலிவுட் நடிகருமான புரூஸ் லீ 1973ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி மறைந்தார்.
💪 1940ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி டென்மார்க் பன்னாட்டு அமைப்பில் இருந்து விலகியது.
🌷 1953ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி யூனிசெப் (United Nations Children's Fund) அமைப்பை நிரந்தரமாக்கும் முடிவு ஐ.நா.வில் எடுக்கப்பட்டது.

♗ உலக சதுரங்க கூட்டமைப்பு 1924ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி பாரிஸ் நகரில் நிறுவப்பட்டது. இது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனம்.
♘ இதன் குறிக்கோள் நாம் அனைவரும் ஒரே மக்கள் என்பதாகும். தற்போது இந்நிறுவனத்தில் 150க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இக்கூட்டமைப்பு ஜூலை 20ஆம் தேதியை சர்வதேச சதுரங்க தினமாக 1966ஆம் ஆண்டில் அறிவித்தது.
👣 அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து நாசா விண்வெளி மையத்தின் சார்பில் 1969ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி அப்பலோ 11 என்ற விண்கலம் நிலவுக்கு பயணமானது. இதில் நீல் ஆம்ஸ்ட்ராங், பைலட் மைக்கேல் காலியன்ஸ் மற்றும் பைலட் எட்வின் ஆல்ட்ரின் ஆகிய மூன்று விண்வெளி வீரர்கள் பயணித்தனர்.
👣 இந்த விண்கலம் ஜூலை 20 அன்று நிலவில் இறங்கியது. அதில் நீல் ஆம்ஸ்ட்ராங், விண்கலத்தில் இருந்து இறங்கி நிலவில் முதலில் காலடி வைத்தார். நிலவில் கால் பதித்த முதல் மனிதர் என்ற சாதனையும் படைத்தார்.
👥 மரபியலின் தந்தை கிரிகோர் யோஹன் மெண்டல் 1822ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி ஆஸ்திரியப் பேரரசின் ஹெய்ன்சன் டார்ஃப் நகரில் (இன்றைய செக் குடியரசு) பிறந்தார்.
👥 சிறுவயதிலிருந்தே இவருக்கு மரபுப் பண்புகள் ஆராய்ச்சிகளில் ஆர்வம் அதிகமாக இருந்தது. எனவே தனது தோட்டத்தில் பட்டாணிச் செடிகளை வளர்த்து ஆராய்ச்சி செய்து வந்தார்.
👥 மரபுப் பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு கடத்தப்படுவதைக் கண்டறிந்தார். இவையே மெண்டலின் விதிகள் எனப்படுகின்றன.
👥 உயிர் அறிவியலின் அடிப்படையைக் கண்டறிந்த மெண்டல் 62வது வயதில் (1884) மறைந்தார்.
Social Plugin