Type Here to Get Search Results !

பிப்ரவரி 21

👉 உலக தாய்மொழி தினம்


🌷 1804ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி நீராவியால் இயங்கும் முதல் ரயில் என்ஜின் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது.

🌷 1918ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி கடைசி கரலீனா பரக்கீட் என்ற பறவை சின்சினாட்டியில் (US) இறந்தது.


உலக தாய்மொழி தினம்

🌷 ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ஆம் தேதி உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது.

🌷 உலகில் சுமார் 6000 மொழிகள் உள்ளன. ஏற்கனவே பல மொழிகள் அழிந்து விட்டன. எனவே, அழிந்துவரும் மொழிகளைப் பாதுகாக்கவும், அவற்றின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் யுனெஸ்கோ (UNESCO) அமைப்பு உலக தாய்மொழி தினத்தை 1999ஆம் ஆண்டுமுதல் அறிமுகப்படுத்தியது.


மிர்ரா அல்ஃபாஸா

🌷 அன்னை (The Mother) என்று போற்றப்படும் ஆன்மீக வழிகாட்டியான மிர்ரா அல்ஃபாஸா (Mirra Alfassa) 1878ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பிறந்தார்.

🌷 இவர் சிறுவயதிலிருந்தே ஆன்மீக நாட்டம் கொண்டிருந்தார். விவேகானந்தரின் 'ராஜ யோக' நூலைப் படித்ததன் மூலம் கிழக்கத்திய நாடுகளின் யோகமுறை குறித்து அறிந்தார்.

🌷 தன்னைப் போன்ற ஆன்மீகத் தேடல் கொண்டவர்களை இணைத்து 'தி நியூ ஐடியா' என்ற அமைப்பை உருவாக்கினார். இவருடைய குரு ஸ்ரீ அரவிந்தர் ஆகும். அரவிந்தரின் பெயரில் 1926ஆம் ஆண்டு ஆசிரமத்தை நிறுவினார்.

🌷 அரவிந்தர் இந்திய இளைஞர்களுக்கு புதுமையான முறையில் கல்வி வழங்க வேண்டும் என நினைத்தார். அதை பூர்த்தி செய்வதற்காக கல்வி மையங்களைத் தொடங்கினார். இவரது ஆன்மீக, அறப்பணிகளின் காரணமாக 'அன்னை' என்று போற்றப்பட்டார்.

🌷 இவரது அனைத்து செயல்களும் திரட்டப்பட்டு மொத்தம் 17 தொகுதிகளாக வெளிவந்தது. இவரது 22 ஆண்டு கால ஆன்மீக செயல்பாடுகளை 'தி மதர்ஸ் அஜெண்டா' நூல் விவரிக்கிறது.

🌷 மனிதகுல ஒருமைப்பாட்டை உருவாக்கிய 'அன்னை' மிர்ரா அல்ஃபாஸா தனது 95வது வயதில் (1973) மறைந்தார்.