🌷 1913ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி உலகின் முதல் குறுக்கெழுத்துப் போட்டி நியூயார்க் வேர்ல்ட் பத்திரிக்கையில் வெளியானது.
🌷 1968ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி சந்திரனுக்கு மனிதனை ஏற்றிச்சென்ற விண்கலமான அப்பல்லோ 8 புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது.
🌷 1968ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி சந்திரனுக்கு மனிதனை ஏற்றிச்சென்ற விண்கலமான அப்பல்லோ 8 புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது.
🌷 தமிழ் மொழி மீதும் தமிழ் மக்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்ட கன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி 1932ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் தீர்த்தஹள்ளி அடுத்த மெலிகே கிராமத்தில் பிறந்தார்.
🌷 1970ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக பணியில் சேர்ந்து, 17 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினார். இவர் கோழிக்கோடு மகாத்மா காந்தி பல்கலைக்கழக துணைவேந்தராகவும், கர்நாடக மத்திய பல்கலைக்கழக வேந்தராகவும் பணியாற்றியுள்ளார்.
🌷 இவர் ஆரம்பத்தில் சிறுகதைகள், நாவல்கள் எழுதத் தொடங்கினார். சாகித்ய அகாடமி தலைவராக 1993ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
🌷 இவர் எழுதிய 'சம்ஸ்காரா', 'பவா', 'திவ்யா', 'அவஸ்தே', 'மௌனி' உள்ளிட்ட பல படைப்புகள் திரைப்படங்களாக தயாரிக்கப்பட்டுள்ளன. 50 ஆண்டுகளுக்கு மேலாக இவர் எழுதி வந்த கட்டுரைகள் 8 தொகுதிகளாக வெளிவந்துள்ளது.
🌷 இவர் 'தமிழ் தனித்துவம் வாய்ந்தது, தமிழரின் கலாச்சார வேர்கள் வலிமையானவை' என்பார். குழந்தைகளுக்குப் பள்ளியில் பயிற்று மொழியாகத் தாய்மொழி இருப்பதன் அவசியத்தை வலியுறுத்தியவர்.
🌷 இவர் 1994ஆம் ஆண்டு ஞானபீட விருது பெற்றார். ராஜ்யோத்சவா, பத்மபூஷண் விருது மற்றும் இலக்கிய சாதனைக்காக பல முக்கிய விருதுகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளார்.
🌷 2011ஆம் ஆண்டு இவரது 'பாரதிபுரா' படைப்பு 'தி இந்து' இலக்கியப் பரிசுக்காகவும், 2013ஆம் ஆண்டு இவரது பெயர் புக்கர் பரிசுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டது.
🌷 உலக அளவில் புகழ்பெற்று விளங்கிய எழுத்தாளரான யு.ஆர்.அனந்தமூர்த்தி தன்னுடைய 81-வது வயதில் (2014) மறைந்தார்.
Social Plugin