Type Here to Get Search Results !

நவம்பர்22

👉 ஜல்காரிபாய் பிறந்த தினம்


🌷 1774ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி ஆங்கிலேய இராணுவ வீரர் ராபர்ட் கிளைவ் மறைந்தார்.

🌷 1968ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி பி.ஹெச்.பி (PHP) நிரலாக்க மொழியை உருவாக்கிய ரஸ்மஸ் லெர்டெர்ஃப் (Rasmus Lerdorf) பிறந்தார்.

🌷 1908ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி அல்பேனிய எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

🌷 2005ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி எக்ஸ் பாக்ஸ் 360 நிகழ்பட விளையாட்டு இயந்திரத்தை (video game) மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டது.


ஜல்காரிபாய்

🌷 சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஜல்காரிபாய் 1830ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் புந்தேல்கண்ட் பகுதியில் உள்ள போல்ஜா என்ற கிராமத்தில் பிறந்தார்.

🌷 இவர் சிறுவயதிலேயே குதிரையேற்றம், வாள்வீச்சு உள்ளிட்ட அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்தார். ஜான்சி ராணி லட்சுமிபாய் இவரது போர்த்திறன், துணிச்சல் வீரத்தைக் கண்டு ஆச்சரியமடைந்து, ஜல்காரிபாயை தன் படையில் சேர்த்துக்கொண்டார்.

🌷 ஜான்சி கோட்டையின் மீது ஆங்கில அரசு பலமுறை படை எடுத்தது. ஒவ்வொரு முறையும் படையெடுப்புகளை ஜான்சி ராணியின் வீரப்படை முறியடித்தது. அதில் இவரது பங்கு முக்கியமானது.

🌷 1857ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் போரின்போது, மிகப்பெரிய படையுடன் ஆங்கில அரசு ஜான்சியை முற்றுகையிட்டது. கல்பி என்ற இடத்தில், மற்ற புரட்சிப் படைகளுடன் இணைவதாகத் திட்டமிட்டிருந்த ஜான்சி ராணிக்கு, பெரிய படையை எதிர்த்துப் போரிடுவது சவாலாக இருந்தது.

🌷 ராணி வேடத்தில் தானே முன்னின்று போரிடுவதாக கூறிய ஜல்காரிபாய், தந்திரமாக ராணியை கோட்டையில் இருந்து தப்ப வைத்தார். அதே நேரத்தில் ஜான்சி படைக்குத் தலைமை வகித்து வீரத்துடன் போரிட்டார். ஆனால், மாபெரும் படையை எதிர்த்துப் போராட முடியாமல் எதிரிகளிடம் பிடிபட்டார்.

🌷 ஜான்சி ராணியை பிடித்துவிட்டதாக கூறிய ஆங்கில அரசு ஜல்காரிபாயிடம் 'உங்களை என்ன செய்வது?' என்று கேட்டனர். அதற்கு 'தூக்கிலிடுங்கள்' என்றார். பின்னர், அவர் ராணி அல்ல என்ற உண்மையை அறிந்த ஆங்கில அரசு, அவரது வீரத்தையும், விவேகத்தையும் பாராட்டி விடுதலை செய்தது.

🌷 ஜல்காரிபாய் 1858ஆம் ஆண்டு ஜான்சி போரின்போது வீரமரணம் அடைந்ததாக சில குறிப்புகள் கூறுகின்றன.