Type Here to Get Search Results !

அக்டோபர்24

👉 ஐக்கிய நாடுகள் தினம்

👉 உலக தகவல் வளர்ச்சி தினம்

👉 உலக போலியோ தினம்

👉 மருது பாண்டியர்கள் நினைவு தினம்


🌷 1857ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி உலகின் முதலாவது கால்பந்தாட்ட அணியான ஷெஃபீல்ட் கால்பந்து அணி இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது.

🌷 1931ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி ஜார்ஜ் வாஷிங்டன் பாலம் திறக்கப்பட்டது.


ஐக்கிய நாடுகள் தினம்

🌷 1945ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி ஐக்கிய நாடுகள் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இத்தினமானது 1948ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24ஆம் தேதி அன்று கடைபிடிக்கப்படுகிறது.

🌷 இத்தினத்தின் முக்கிய நோக்கம் ஐ.நா.வின் நோக்கங்களையும், சாதனைகளையும் உலகெங்கும் எடுத்துக் கூறுவதாகும். மேலும், ஐக்கிய நாடுகள் சபை என்பது உலக சமாதானம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றிற்காக சுயவிருப்பத்தின் அடிப்படையில் ஒன்று சேர்ந்த சுதந்திர நாடுகளின் ஒரு தனித்துவமான அமைப்பாகும்.


உலக தகவல் வளர்ச்சி தினம்

🌷 வளர்ச்சியின் மீதான பிரச்சனைகளின் மீது உலகின் கவனத்தை ஈர்க்கவும், அதை சரி செய்வதற்கு சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான அவசியத்தை உலகில் பரப்பவும் உலக தகவல் வளர்ச்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24ம் தேதி, அனுசரிக்கப்படுகிறது.

🌷 எனவே, 1972ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதியை ஐ.நா.சபை உலக தகவல் வளர்ச்சி தினமாக அறிவித்தது. இத்தினம் 1973ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.


உலக போலியோ தினம்

🌷 உலக போலியோ தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இளம்பிள்ளை வாத நோய்க்கு முதன்முறையாக தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர் டாக்டர் ஜோனஸ் சால்க் ஆவார். இளம்பிள்ளை வாத நோயானது போலியோ என்னும் ஆங்கிலப் பெயராலும் பரவலாக அழைக்கப்படுகின்றது.

🌷 இத்தினத்தின் முக்கிய நோக்கம், போலியோவை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், இதை ஒழிக்க உலகளவில் முயற்சி எடுக்கப்பட வேண்டும் என்பதாகும்.


இராசிபுரம் கிருஷ்ணசுவாமி ஐயர் லக்ஷ்மணன்

🌺 நகைச்சுவை சித்திரம் வரைபவரான இராசிபுரம் கிருஷ்ணசுவாமி ஐயர் லக்ஷ்மணன் 1921ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி மைசூரில் பிறந்தார்.

🌺 கன்னட நகைச்சுவை இதழான, கோரவஞ்சிக்காக கேலிச்சித்திரங்கள் வரைந்தார். பின்னர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் 'யூ செட் இட்' (You Said it) என்கிற தலைப்பில் 'திருவாளர் பொதுஜனம்' (Common Man) என்கிற கதாபாத்திரத்தை 1951 முதல் அறுபதாண்டு காலமாக வரைந்து வந்தார்.

🌺 இவர் பத்மபூஷண் மற்றும் பத்மவிபூஷண் போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். இவர் தன்னுடைய 93வது வயதில் (2015) மறைந்தார்.


🌷 1801ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி மருது பாண்டிய சகோதரர்களும் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டனர்.