👉 ராஜேந்திர பிரசாத் நினைவு தினம்
🌷 1935ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி வாலஸ் கரோதேர்ஸ் (Wallace Carothers) என்பவரால் நைலான் கண்டுபிடிக்கப்பட்டது.
🌷 1953ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி ஜேம்ஸ் வாட்சன் மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியோர் டி.என்.ஏ-யின் வேதியியல் அமைப்பைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.
🌷 1953ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்க பொருளியல் நிபுணரும், ஆசிரியருமான பால் கிரக்மேன் பிறந்தார்.
🌷 1953ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி ஜேம்ஸ் வாட்சன் மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியோர் டி.என்.ஏ-யின் வேதியியல் அமைப்பைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.
🌷 1953ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்க பொருளியல் நிபுணரும், ஆசிரியருமான பால் கிரக்மேன் பிறந்தார்.
🌷 தியாகிகளை கொண்டாடுவதுபோல அறிவியல் அறிஞர்களும் போற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் 1987ஆம் ஆண்டு தேசிய அறிவியல் தினம் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
🌷 சர்.சி.வி.ராமன் (C.V.Raman) அவர்கள் ஒளிச்சிதறல் விதி அதாவது ராமன் விளைவு (Raman Effect) என்கிற ஆராய்ச்சி முடிவை பிப்ரவரி 28ஆம் தேதி(1928) வெளியிட்டார். இதற்காக அவர் 1930ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்று இந்தியாவிற்கு புகழை தேடித்தந்தார். ராமன் ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28ஆம் தேதி தான் தேசிய அறிவியல் தினமாக அறிவிக்கப்பட்டது.
🌷 அறிவியலின் சிறப்பை இளம்தலைமுறை மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, புதிய கண்டுபிடிப்புகளை வரவேற்பதே இத்தினத்தின் நோக்கமாகும்.
🌷 நவீன இலக்கிய எழுத்தாளரான தி.ஜானகிராமன் 1921ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள தேவக்குடியில் பிறந்தார்.
🌷 இவர் கல்லூரியில் படித்தபோதே, விடுதலைப் போராட்ட கூட்டங்களில் கலந்துக்கொண்டார். அதுதொடர்பாக பல கதை, கட்டுரைகளை எழுதியுள்ளார். தனது பயண அனுபவங்களை 'உதயசூரியன்', 'கருங்கடலும் கலைக்கடலும்' என்ற தலைப்புகளில் கணையாழி என்ற தன்னுடைய வார இதழில் எழுதினார்.
🌷 1964ஆம் ஆண்டு வெளியான இவரது 'மோகமுள்' நாவல், இலக்கிய உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அது திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. அதில் 'சக்தி வைத்தியம்' என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். இவரது எழுத்தில் இசைக்கு முக்கிய இடம் இருக்கும்.
🌷 இசையை எழுத்தாக்கிய அபூர்வ எழுத்தாளர் என போற்றப்பட்டவரும், 'தி.ஜா.' என இலக்கிய உலக நண்பர்களால் அன்போடு அழைக்கப்பட்டவருமான இவர் தனது 61வது வயதில் (1982) மறைந்தார்.
🌷 இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் பாபு இராஜேந்திர பிரசாத் 1884ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி பீகாரில் பிறந்தார். இவரை மக்கள் பாபுஜி என்று அன்புடன் அழைத்தனர்.
🌷 புகழ்பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றிய இவர் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். பின்பு வழக்கறிஞர் பணியைத் துறந்து, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். உண்மையை அறியும் குழுவுக்கு தலைமையேற்ற ராஜேந்திர பிரசாத், முக்கியமான தீர்வுகளை அரசுக்குப் பரிந்துரைத்து, விவசாயச் சட்டத்தில் இடம்பெறச் செய்தார். இது ராஜேந்திர பிரசாத் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
🌷 இந்தியக் குடியரசை செம்மையாக வழிநடத்திய இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது இந்திய அரசு. இந்திய குடியரசுத் தலைவர் பதவியை இரண்டு முறை வகித்த பெருமைக்குரிய டாக்டர் பாபு இராஜேந்திர பிரசாத் தனது 78வது வயதில் 1963ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி மறைந்தார்.
Social Plugin