👉 பசுமை நுகர்வோர் தினம்
👉 விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த தினம்
🌷 1928ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி அலெக்சாண்டர் பிளெமிங் பென்சிலினைக் கண்டுபிடித்தார்.
ரேபிஸ் எனும் வைரஸ் வீட்டு விலங்கான நாய்களையும், பூனைகளையும் எளிதில் தாக்கக்கூடியது. ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள் மனிதர்களைக் கடிப்பதாலோ அல்லது அவ்விலங்குகளால் கடிபட்ட பிற விலங்குகள் மூலமாகவோ ரேபிஸ் நோய் பரவுகிறது.
இந்நோய்க்கு லூயி பாஸ்டர் என்பவர் 1885ஆம் ஆண்டில் மருந்தைக் கண்டுபிடித்தார். இவர் மறைந்த செப்டம்பர் 28ஆம் தேதியை உலக ரேபிஸ் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.
பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. ஆகவே இயற்கையான பொருட்களையே பயன்படுத்த வேண்டும். நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் மறுசுழற்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும். உலகின் பல பகுதிகளில் பசுமை நுகர்வோர் அமைப்பு மக்களிடம் பசுமையைப் பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தவே செப்டம்பர் 28ஆம் தேதி பசுமை நுகர்வோர் தினம் கொண்டாடப்படுகிறது.
விடுதலைப் போராட்ட வீரரும், புரட்சியாளருமான பகத் சிங் 1907ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி பாகிஸ்தானிலுள்ள பங்கா என்ற கிராமத்தில் பிறந்தார்.
கோதுமை வயலில் துப்பாக்கி விளைய வைத்து வெள்ளையரை வேட்டையாட வேண்டும் என்று சிறு வயதிலேயே கனவு கண்டவர். ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தபோது இவருக்கு 12 வயது.
சைமன் குழு 1928-ல் இந்தியா வருவதை எதிர்த்து பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய் அமைதிப் பேரணி நடத்தினார். துப்பாக்கியும் புத்தகங்களும் இவரது நெருங்கிய நண்பர்கள். இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி ஓங்குக) என்பது இவரது தாரக மந்திரம்.
இவர் சிறையில் இருந்தபோது ஏராளமான நூல்களைப் படித்தார். இவர் தி டோர் டு டெத், ஐடியல் ஆப் சோஷலிஸம் போன்ற நூல்களை எழுதினார்.
ஏராளமான இளைஞர்களுக்கு ஊக்கம் அளித்து விடுதலைப் போராட்ட இயக்கத்தில் பங்குபெறச் செய்த புரட்சியாளரான மாவீரன் பகத் சிங் 24-வது வயதில் (1931) ஆங்கில அரசால் தூக்கிலிடப்பட்டார்.
அனைத்து மக்களாலும் போற்றிக் கொண்டாடப்படும் ஆன்மிக மகான் ஷீரடி சாய் பாபா 1835ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் அகமது நகர் மாவட்டம் ஷீரடியில் பிறந்தார்.
பல்வேறு சாஸ்திரங்களைக் கற்று உணர்ந்தவர். பகவத்கீதை, குர்ஆனுக்கு அற்புதமான விளக்கங்களை அளித்து, அறிஞர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
எண்ணிலடங்கா பக்தர்களால் போற்றி வழிபடப்பட்டு வரும் ஷீரடி சாய் பாபா 82-வது வயதில் (1918) மறைந்தார்;.
இந்தியத் தொழிலதிபரும் ஒலிம்பிக் விளையாட்டு வீரருமான அபினவ் பிந்த்ரா 1982ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள தேராதூன் மாவட்டத்தில் பிறந்தார்.
2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கத்தை பெற்றார். இவர் ஒலிம்பிக் வரலாற்றில் தனி நபர் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை பெற்றவர்களில் முதல் இந்தியர் ஆவார்.
Social Plugin