🌷 1958ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா ஆரம்பிக்கப்பட்டது.
🌷 1904ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி இந்தியாவின் முதன்மையான தொழிலதிபர் ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா பிறந்தார்.
🌷 1904ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி இந்தியாவின் முதன்மையான தொழிலதிபர் ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா பிறந்தார்.
🌷 அழிந்து வரும் புலி இனத்தை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச புலிகள் தினம் ஜூலை 29ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகிலேயே இந்திய வங்கதேச எல்லையில் உள்ள சுந்தரவனக் காடுகளில் தான், புலிகள் அதிகளவில் வாழ்கின்றன.
🌷 மனிதர்கள் புலிகளை வேட்டையாடுவதாலும், மேலும் காடுகளில் ஏற்படும் தீ விபத்து, காட்டாற்று வெள்ளம் காரணமாகவும், புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே, புலிகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
🌷 தமிழ் மொழிபெயர்ப்பு முன்னோடியான பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரி 1890ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி திருச்சியில் பிறந்தார்.
🌷 இவர் சாகித்ய அகாடமியின் மகாமகிமோ பாத்தியாய என்ற பட்டத்தையும், வித்தியாரத்தினம், வித்யாநிதி, வித்யாபூஷணம் போன்ற ஏராளமான பட்டங்களையும் பெற்றுள்ளார்.
🌷 தமிழ் இலக்கணக் கோட்பாடுகளின் வரலாறும் சமஸ்கிருத இலக்கியத்தோடு அவற்றுக்கான தொடர்பும் என்ற ஆய்வுக்காக, (History of Grammatical Theories in Tamil and their relation to grammatical literature in Sanskrit) 1930-ல் தமிழாய்வில் முதல் முனைவர் பட்டம் பெற்றார்.
🌷 இவர் விளக்கமுறை இலக்கணம், வரலாற்று இலக்கணம், ஒப்பீட்டு இலக்கணம் என மூவகை இலக்கணத்தையும் எழுதியவர். வாழ்நாள் முழுவதையும் தமிழ்மொழி ஆராய்ச்சிக்காக அர்ப்பணித்த இவர் தனது 87வது வயதில் (1978) மறைந்தார்.
🌷 உலகை உலுக்கிய சர்வதிகாரிகளின் பட்டியலில் இருக்கும் இத்தாலியின் சர்வதிகாரியான பெனிட்டோ முசோலினி 1883ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி பிறந்தார்.
🌷 1939ல் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரும், முசோலினியும் ஒரே அணியில் நின்று நேச நாடுகளை எதிர்த்தனர். உலகைப் பயமுறுத்திய சர்வதிகாரிகளில், ஹிட்லருக்கு அடுத்தபடியாக இருந்தவர் இவர்தான்.
🌷 சர்வதிகாரியாக விளங்கிய முசோலினி தனது 61வது வயதில் (1945) புரட்சிக்காரர்களால் கொல்லப்பட்டார்.
Social Plugin