Type Here to Get Search Results !

மே 2

👉 உலக கடவுச் சொல் தினம்

👉 இந்திய திரையுலக மேதை சத்யஜித் ராய் பிறந்த தினம்


🌷 1519ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி உலக புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தை வரைந்த லியானார்டோ டா வின்சி மறைந்தார்.

🌷 1952ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி உலகின் முதலாவது ஜெட் விமானம், டி ஹாவிலண்ட் கொமெட் 1, முதற்தடவையாக லண்டனுக்கும், ஜோகான்னஸ்பேர்க் நகருக்கும் இடையில் பறந்தது.


உலக கடவுச் சொல் தினம்

👉 இத்தினம் ஆண்டுதோறும் மே மாத முதலாவது வியாழக்கிழமையில் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் இணைய பயனர்கள் மத்தியில் பாதுகாப்பான கடவுச் சொல்லை அதாவது யாரும் யூகிக்க முடியாத கடவுச் சொல்லை பயன்படுத்துவதை ஊக்குவிக்க இத்தினத்தை கொண்டாடி வருகின்றனர்.


சத்யஜித் ராய்

🌷 இந்திய திரையுலக மேதை சத்யஜித் ராய் 1921ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார்.

🌷 இவர் ஜவஹர்லால் நேரு, பூபதி பூஷண் ஆகியோரின் நாவல்களில் அட்டைப் படம் வரைந்ததன் மூலம் புகழ்பெற்றார். 1947ஆம் ஆண்டு சித்தானந்தா தாஸ் குப்தாவுடனும், மற்றவர்களுடனும் இணைந்து ராய் கல்கத்தா பிலிம் சொசைட்டியை உருவாக்கினார்.

🌷 பிறகு தனக்குள் காவியமாக சுழன்றுகொண்டிருந்த பதேர் பாஞ்சாலி திரைப்படத்தை 1955ஆம் ஆண்டு வெளியிட்டார். உலக அளவில் தலைசிறந்த இயக்குநராக இவரை இத்திரைப்படம் அடையாளம் காட்டியது.

🌷 அதன் பிறகு அபராஜிதோ, அபுர் சன்சார், தேவி, மஹாநகர், சாருலதா, தீன் கன்யா உள்ளிட்ட இவரது எல்லாப் படைப்புகளுமே உலக அளவில் புகழ்பெற்றன.

🌷 தன்னுடைய திரைப்படப் பணிக்காக 1992ஆம் ஆண்டு சிறப்பு ஆஸ்கார் விருது பெற்றார். இவ்விருதை பெற்ற முதல் இந்தியரும் இவரே. மேலும், 1992ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னாவை பெற்றார்.

🌷 இந்திய திரைப்படங்கள் மீது உலகின் கவனத்தை திருப்பிய இணையற்ற இயக்குநராகப் போற்றப்பட்ட சத்யஜித் ராய் 70வது வயதில் (1992) மறைந்தார்.