👉 பிரெட்ரிக் வில்ஹெம் ஆஸ்வால்டு பிறந்த தினம்
🌷 1946ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவில் ஐவகர்லால் நேரு தலைமையில் பிரதமரின் அதிகாரங்களுடன் இடைக்கால அரசு உருவானது.
✦ 1945ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி பசிபிக் போர் முடிவுக்கு வந்தது.
🏧 1969ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி அமெரிக்காவில் முதலாவது ஏடிஎம் மையம் நியூயார்க்கில் அமைக்கப்பட்டது.
✦ 1945ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி பசிபிக் போர் முடிவுக்கு வந்தது.
🏧 1969ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி அமெரிக்காவில் முதலாவது ஏடிஎம் மையம் நியூயார்க்கில் அமைக்கப்பட்டது.
🍲 ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2ஆம் தேதி சர்வதேச தேங்காய் தினமாக கொண்டாடப்படுகிறது.
🍲 ஆசிய பசிபிக் தேங்காய் உற்பத்தியாளர்களின் மாநாடு 1998ஆம் ஆண்டு, வியட்நாம் நாட்டில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் செப்டம்பர் 2ஆம் தேதி சர்வதேச தேங்காய் தினமாக பிரகடனம் செய்யப்பட்டது.
🍲 தென்னை பயிரின் முக்கியத்துவம், தேங்காயின் பலன்களை எடுத்துக் கூறி அதன் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் விதத்தில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.
🏆 நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய வேதியியலாளர் பிரெட்ரிக் வில்ஹெம் ஆஸ்வால்டு 1853ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி லத்வியா நாட்டின் ரிகா நகரில் பிறந்தார்.
🏆 இவர் மின் வேதியியல், ரசாயன இயக்கவியல் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இத்துறையில் நீர்த்தல் விதியைக் கண்டறிய இவரது ஆராய்ச்சிகள் உதவின. இது ஆஸ்வால்டு நீர்த்தல் விதி எனப்படுகிறது.
🏆 வினைவேக மாற்றம், ரசாயன சமநிலை மற்றும் எதிர்வினை இயக்க வேகம் குறித்த கண்டுபிடிப்புகளுக்காக 1909-ல் நோபல் பரிசு பெற்றார்.
🏆 டெக்ஸ்ட் புக் ஆஃப் ஜெனரல் கெமிஸ்ட்ரி, அவுட்லைன் ஆஃப் ஜெனரல் கெமிஸ்ட்ரி என்பது உட்பட பல பாடப் புத்தகங்களையும், பகுப்பாய்வு வேதியியல், மின் ரசாயனவியல், கனிம வேதியியல் உள்ளிட்ட பிரிவுகளில் பல நூல்களையும் எழுதி வெளியிட்டார்.
🏆 இயற்பியல் வேதியியல் துறையின் முன்னோடி என்று போற்றப்படும் வில்ஹெம் ஆஸ்வால்டு 79-வது வயதில் (1932) மறைந்தார்.
Social Plugin