Type Here to Get Search Results !

டிசம்பர் 30

👉 இரமண மகரிஷி பிறந்த தினம்


🌷 2013ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வர் மறைந்தார்.

🌷 1917ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி இந்திய விண்வெளி அறிவியலின் தந்தை விக்ரம் சாராபாய் மறைந்தார்.



பிரகாஷ் வீர் சாஸ்திரி

🌷 தலைசிறந்த சமஸ்கிருத அறிஞர், பேச்சாளர், ஆரிய சமாஜ தலைவரான பண்டிட் பிரகாஷ் வீர் சாஸ்திரி 1923ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிறந்தார்.

🌷 இவர் 'என்னைவிட சிறந்த பேச்சாளர்' என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் பாராட்டு பெற்றவர். சுவாமி தயானந்தரின் கருத்துகள், ஆரிய சமாஜ கோட்பாடுகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.

🌷 இவர்தான் ஐ.நா.சபையில் இந்தியில் பேசிய முதல் இந்தியர். இவர் சிறந்த கவிஞரும் கூட. மக்களவை தேர்தலில் 2 முறை சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நாடாளுமன்ற உறுப்பினராக ஆரிய சமாஜ வளர்ச்சிக்காக பல பணிகளை மேற்கொண்டார்.

🌷 உத்தரப்பிரதேசத்தின் ஆரிய பிரதிநிதிகள் சபை தலைவராகப் பொறுப்பேற்று, பல ஆண்டுகள் சேவை செய்து வந்தார். கட்டாய மத மாற்றத்தை தடுக்க மத பாதுகாப்பு மசோதா கொண்டு வரவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் 1960ஆம் ஆண்டு முன்மொழிந்தார்.

🌷 அபார பேச்சாற்றல் கொண்டவரும் தலைசிறந்த சமஸ்கிருத அறிஞருமான பிரகாஷ் வீர் சாஸ்திரி, 53வது வயதில் (1977) மறைந்தார். 2003ஆம் ஆண்டு துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி இவரது நாடாளுமன்ற உரைகளின் ஒரு பகுதியை புத்தகமாக வெளியிட்டார்.


இரமண மகரிஷி

🌷 தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி இரமண மகரிஷி 1879ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழியில் பிறந்தார். இவரது இயற்பெயர் வெங்கடராமன்.

🌷 அத்வைத வேதாந்த நெறியை போதித்த இவர், திருவண்ணாமலையில் வாழ்ந்தவர். திருவண்ணாமலையில் அமைந்துள்ள, 'இரமண ஆசிரமம்', உலகப் புகழ் பெற்றதாகும்.

🌷 இவரை பின்பற்றியவர் விசிறி சாமியார் என அழைக்கப்படும் யோகி ராம் சுரத் குமார் ஆவார். இவர் தன்னுடைய 70வது வயதில் (1950) மறைந்தார்.