Type Here to Get Search Results !

டிசம்பர் 3

👉 சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்

👉 இராஜேந்திர பிரசாத் பிறந்த தினம்


🌷 1979ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி இந்திய ஹாக்கி விளையாட்டு வீரர், தியான் சந்த் மறைந்தார்.


சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்

🌷 மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்துதர வலியுறுத்தியும், அவர்களின் பிரச்சனைகளை புரிந்துகொண்டு, அவர்களுக்கான உரிமைகளை வழங்க வலியுறுத்தியும், டிசம்பர் 3ஆம் தேதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.


பாபு இராஜேந்திர பிரசாத்

🌷 இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் பாபு இராஜேந்திர பிரசாத் 1884ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி பீகாரில் பிறந்தார். இவரை மக்கள் பாபுஜி என்று அன்புடன் அழைத்தனர்.

🌷 புகழ்பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றிய இவர் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். பின்பு வழக்கறிஞர் பணியைத் துறந்து, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். உண்மையை அறியும் குழுவுக்கு தலைமையேற்ற ராஜேந்திர பிரசாத், முக்கியமான தீர்வுகளை அரசுக்குப் பரிந்துரைத்து, விவசாயச் சட்டத்தில் இடம்பெறச் செய்தார். இது ராஜேந்திர பிரசாத் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

🌷 இந்தியக் குடியரசை செம்மையாக வழிநடத்திய இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது இந்திய அரசு. இந்திய குடியரசுத் தலைவர் பதவியை இரண்டு முறை வகித்த பெருமைக்குரிய டாக்டர் பாபு இராஜேந்திர பிரசாத் தனது 78வது வயதில் (1963) மறைந்தார்.


குதிராம் போஸ்

🌷 இந்திய விடுதலைப் போராட்ட வீரர் குதிராம் போஸ் 1889ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி வங்காளத்தின் மிதினாப்பூர் மாவட்டம் ஹபிப்பூர் கிராமத்தில் பிறந்தார். விடுதலை இயக்கத்தின் ஆசானாக விளங்கியவர்களின் சொற்பொழிவுகளில் கவர்ந்த இவர் விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இணைந்தார்.

🌷 இவர் விடுதலை வீரர்களுக்கு கொடூரமான தண்டனைகளை வழங்கி வந்த மாஜிஸ்திரேட் கிங்ஸ்போர்ட்டின், வாகனத்தின் மீது குண்டு வீசினார். ஆனால், எதிர்பாராத விதமாக அதில் பயணம் செய்த அவரது மனைவியும், மகளும் இறந்தனர்.

🌻எனவே, ஆங்கில அரசு இவருக்கு தூக்குத்தண்டனை (1908) விதித்தது. அப்போது அவரின் வயது 18. கையில் பகவத் கீதையுடனும், வந்தே மாதரம் முழக்கத்துடனும் இந்த மாவீரனின் உயிர் பிரிந்தது.


ரோலண்ட் ஹில்

🍀 நவீன அஞ்சல் சேவையை கண்டுபிடித்த ரோலண்ட் ஹில் 1795ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். அப்பொழுது தபால்களைப் பெறுபவர்கள்தான் கட்டணத்தைச் செலுத்தும் நடைமுறை இருந்தது. இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் ஒரேமாதிரியான ஃபோர் பென்னி போஸ்ட் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இங்கிலாந்து நாடாளுமன்றமும் இதற்கு ஒப்புதல் அளித்தது.

🍀 இதன்படி, பணம் கொடுத்து ஸ்டாம்ப் வாங்கி, தபாலில் ஒட்டும் பழக்கம் 1839ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. கட்டணம் செலுத்தி தபாலை பெறும் நடைமுறையை முடிவுக்கு கொண்டுவந்து, ஏழை எளியவர்களும் தபால் சேவையை பெறச் செய்தார். முதல் தபால்தலைகள் 1840ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்தன. ஓய்வு பெறும்வரை தபால் துறையில் பல மாற்றங்களைச் செய்த ரோலண்ட் ஹில் தனது 83வது வயதில் (1879) மறைந்தார்.