🌷 1845ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி இந்திய விடுதலை இயக்க ஆயுதப் புரட்சிக் குழுக்களின் தந்தை வாசுதேவ் பல்வந்த் பட்கே மகாராஷ்டிர மாநிலம் ராஜ்கோட் அருகே ஷிர்தான் என்ற கிராமத்தில் பிறந்தார்.
🌷 1861ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
🌷 1869ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி அறிவியல் இதழ் நேச்சர் முதற்தடவையாக வெளியிடப்பட்டது.
🌷 1861ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
🌷 1869ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி அறிவியல் இதழ் நேச்சர் முதற்தடவையாக வெளியிடப்பட்டது.
🌺 தாவரவியல் நிபுணரும், மரபினக் கலப்பு ஆராய்ச்சியாளருமான ஜானகி அம்மாள் 1897ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி கேரள மாநிலம் தலச்சேரியில் பிறந்தார்.
🌺 உலகப் புகழ்பெற்ற தாவரவியலாளர் சிரில் டார்லிங்டனுவுடன் இணைந்து தாவர குரோமோசோம் அட்லஸ் என்ற வரைபடத் தொகுப்பை 1945-ல் வெளியிட்டார். லண்டனில் உள்ள ஜான் இன்னஸ் தோட்டக்கலை நிறுவனத்தில் இணை மரபியலாளராகப் பணிபுரிந்தார்.
🌺 இந்திய தாவரவியல் சர்வே அமைப்பை சீரமைத்து, ஒருங்கிணைப்பதற்காக ஜவஹர்லால் நேருவின் அழைப்பை ஏற்று 1951-ல் நாடு திரும்பினார். மேலும் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றார்.
🌺 பல கலப்பு மரபின வகைகளை உருவாக்கினார். கரும்பு சம்பந்தமாக இவர் மேற்கொண்ட உயிர் கலவியல் ஆய்வுகள் பல சிறப்பினக் கலப்பு, மரபினக் கலப்பு வகை கரும்புகளையும் உருவாக்க வழிவகுத்தன.
🌺 1956ல் மிச்சிகன் பல்கலைக்கழகம் இவருக்கு எல்எல்டி பட்டம் வழங்கியது. 1977-ல் பத்மஸ்ரீ விருது பெற்றார். 2000-ஆம் ஆண்டில் வகைப்பாட்டியலுக்கான தேசிய விருது இவரது பெயரில் நிறுவப்பட்டது.
🌺 இந்தியப் பாரம்பரிய தாவரவியல் பற்றிய அறிவை திரட்டும் பணியில் வாழ்நாள் முழுவதும் ஈடுபட்ட ஜானகி அம்மாள் தனது 86-வது வயதில் (1984) மறைந்தார்.
🌺 இந்திய பெண் கணித மேதையான சகுந்தலா தேவி 1929ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூரில் பிறந்தார்.
🌺 இவர் ஜூன் 18, 1980ல் லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இரண்டு 13 இலக்க (அதாவது 7,868,369,774,870 * 2,465,099,745,779 = 18.947.668.177.995.426.462.773.730) எண்களை பெருக்கி வெறும் 28 வினாடிகளில் கூறி உலகையே வியக்க வைத்தார். இந்த விடை, 26 இலக்கங்கள் கொண்ட ஒரு எண் ஆகும். இது உலக சாதனையாக, 'கின்னஸ் புத்தகத்தில்' இடம் பெற்றுள்ளது.
🌺 புக் ஆஃப் நம்பர்ஸ், பெர்ஃபெக்ட் மர்டர், ஃபிங்கரிங் : தி ஜாய் ஆஃப் நம்பர்ஸ், இன் தி வொண்டேர்லாண்ட் ஆஃப் நம்பர்ஸ், அஸ்ட்ராலஜி ஃபார் யூ போன்றவை இவருடைய புகழ்பெற்ற புத்தகங்கள் ஆகும்.
🌺 ஹ்யூமன் கம்ப்யூட்டர் அதாவது 'மனித-கணினி' என புகழப்படும் சகுந்தலா தேவி அவர்கள் தனது 83வது வயதில் (2013) மறைந்தார்.
Social Plugin