Type Here to Get Search Results !

ஆகஸ்ட் 5

👉 நீல் ஆம்ஸ்ட்ராங் பிறந்த தினம்

👉 மர்லின் மன்றோ நினைவு தினம்


🌷 விடுதலைப் போராட்ட வீரரும், பிரபல எழுத்தாளருமான துவாரகா பிரசாத் மிஸ்ரா 1901ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தின் பண்டரி கிராமத்தில் பிறந்தார்.

🎻 வயலின் இசைக்கலைஞர் கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை 1898ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் ஆலங்குடியில் பிறந்தார்.

🌷 1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி ஹோண்டா நிறுவனர் சொயிச்சீரோ ஹோண்டா மறைந்தார்.

🌷 1962ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி 17 மாதத் தேடுதலின் பின்னர் நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டார்.

🚀 1969ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி மரைனர் 7, செவ்வாய் கோளிற்கு மிக அருகில் சென்றது.

🗽 1884ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி விடுதலைச் சிலைக்கான அடிக்கல் நியூயார்க் துறைமுகத்தில் பெட்லோ தீவில் நாட்டப்பட்டது.


நீல் ஆம்ஸ்ட்ராங்

🌔 நிலாவில் முதன் முதலில் கால் தடம்பதித்த விண்வெளி வீரர் நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் 1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி அமெரிக்காவின் ஒஹியோ மாநிலம் வாபகெனெட்டா நகரில் பிறந்தார்.

🌔 இவர் 6 வயதில் தந்தையுடன் விமானத்தில் பயணிக்கும் போதே விமானம் ஓட்டும் ஆசை வந்துவிட்டது. தனது 16 வயதிலேயே விமான ஓட்டுநர் உரிமம் பெற்றார்.

🌔 1962-ல் நாசா விண்வெளி திட்டத்தில் இணைந்தார். அங்கு டெஸ்ட் பைலட், கமாண்ட் பைலட், பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டார்.

🌔 1969-ல் மைக்கேல் காலின்ஸ், எட்வர்ட் ஆல்ட்ரின் ஆகியோருடன் நிலாவில் இறங்கும் திட்டத்தில் சேர்க்கப்பட்டார். அப்போலோ-11 விண்கலத்தின் குழுத் தலைவராக விண்வெளிக்குச் சென்றார். 1969 ஜூலை 20-ம் தேதி நிலாவில் முதன்முதலாக காலடி எடுத்து வைத்தார்.

🌔 உலகம் முழுவதும் 17 நாடுகள் இவருக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தன. ஏராளமான பல்கலைக்கழகங்களில் கவுரவ டாக்டர் பட்டம், பிரசிடென்ட் மெடல் ஆஃப் ஃப்ரீடம், அமெரிக்க நாடாளுமன்ற தங்கப் பதக்கம், ஸ்பேஸ் கவுரவப் பதக்கம், சிறந்த பணிக்கான நாசா விருது போன்ற பல பரிசுகள், விருதுகளை பெற்றுள்ளார்.

🌔 இவரது வாழ்க்கை வரலாற்று நூலான 'ஃபர்ஸ்ட் மேன்: த லைஃப் ஆஃப் நீல் ஏ.ஆம்ஸ்ட்ராங்' 2005ல் வெளிவந்தது. வானியல் ஆராய்ச்சிகளில் வாழ்நாள் இறுதிவரை ஆர்வம் கொண்டிருந்த இவர் தனது 82-வது வயதில் (2012) மறைந்தார்.


மர்லின் மன்றோ

🌷 அமரநட்சத்திரம், ஹாலிவுட்டின் ராணி மர்லின் மன்றோ 1926ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தார். இவரின் இயற்பெயர், நார்மா ஜெனி மார்டென்சன்.

🌷 இவருக்கு 1950-ல் வெளிவந்த தி அஸ்பால்ட் ஜங்கிள்(The Asphalt Jungle), டு நாட் பாதர் டு நாக் படங்கள்(Do not Bother to Knock) புகழை தேடித் தந்தன. இவர் கோல்டன் குளோப் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.

🌷 ஒரு நடிகையாக மட்டுமின்றி பாடகி, இயக்குநர் என பன்முகத்திறன் கொண்ட இவர் 36வது வயதில் 1962ஆம் ஆண்டு ஆகஸ்டு 5ஆம் தேதி மறைந்தார்.