Type Here to Get Search Results !

ஜூன் 5

👉 உலக சுற்றுச்சூழல் தினம்

👉 முகம்மது இஸ்மாயில் பிறந்த தினம்


🌷 1819ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி சிறந்த வானியல் ஆராய்ச்சியாளர் மற்றும் கணித வல்லுநருமான ஜான் கோச் ஆடம்ஸ்(John Couch Adams)பிறந்தார்.

🌷 1910ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி ஆங்கில எழுத்தாளரான ஓ ஹென்றி மறைந்தார்.

🌷 1900ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த கவிஞர், புதின ஆசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளரான ஸ்டீபன் கிரேன் (Stephen Crane) மறைந்தார்.


உலக சுற்றுச்சூழல் தினம்

🌷 சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் 1972-லிருந்து கொண்டாடப்படுகிறது.

🌷 உலக நாடுகளுக்கே பெரும் சவாலான பிரச்சனையாக உருவெடுத்துள்ள சுற்றுச்சூழலலைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.


முகம்மது இஸ்மாயில்

🌷 கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (Quaid-e-Millat) என்று போற்றப்படும் இந்திய முஸ்லீம் தலைவர்களுள் ஒருவரான முகம்மது இஸ்மாயில் 1896ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி திருநெல்வேலியில் பிறந்தார்.

🌷 இவர் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொள்வதற்காக படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டார்.

🌷 மேலும், இவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவராகவும், சட்ட சபை உறுப்பினராகவும் (1946-52), டெல்லி மேலவை உறுப்பினராகவும் (1952-58), நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் (1962,1967,1971) பதவி வகித்துள்ளார்.

🌷 மக்களுக்கு வழிகாட்டும் தலைவரான இஸ்மாயில் தனது 75வது வயதில் (1972) மறைந்தார். இவரின் மறைவுக்குப்பின் தமிழக அரசு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு காயிதே மில்லத் நாகைப்பட்டினம் மாவட்டம் (Nagai Quaid-E-Millet) என்று பெயர் சூட்டியது.