🌷 1814ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி சக்சபோனைக் (இசைக்கருவி) கண்டுபிடித்த அடோல்ப் சக்ஸ் என்பவர் பெல்ஜியத்தில் பிறந்தார்.
🌴 சர்வதேச போர் மற்றும் ஆயுத மோதல்களின் சுற்றுச்சூழல் சுரண்டல் தடுக்கும் தினம் நவம்பர் 6ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
🌴 போர் மற்றும் ஆயுத மோதல்களால் இயற்கை பலவிதங்களில் சேதமடைகிறது. பயிர்கள், தண்ணீர் விஷமாதல், காடுகள் எரிதல், காடுகள் அழிக்கப்படுதல் போன்ற மோசமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.
🌴 இது தவிர பல தொழில்நுட்பங்களும் அழிக்கப்படுகின்றன. எனவே, சுற்றுச்சூழல் பாதிக்கக்கூடாது என்பதற்காக ஐ.நா.சபை 2001ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது.
🏈 கூடைப்பந்து கண்டுபிடிப்பாளர் ஜேம்ஸ் நெய்ஸ்மித் 1861ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி கனடாவில் பிறந்தார்.
🏈 இவர் கனடா விளையாட்டு கல்வி ஆசிரியரும், அமெரிக்க கால்பந்தாட்டத்தின் தலைக்கவசத்தை கண்டுபிடித்தவரும் ஆவார். 1891ஆம் ஆண்டு இவர் முதல் 13 கூடைப்பந்து சட்டங்களை கூறியுள்ளார்;. இச்சட்டங்களில் 12 இன்று வரை ஏதாவது ஒரு விதத்தில் பயன்படுகின்றன.
🏈 இவர் 1891ஆம் ஆண்டு மாசசூசெட்ஸில் விளையாட்டு கல்வி ஆசிரியராக இருக்கும்பொழுது கூடைப்பந்து விளையாட்டை கண்டுபிடித்தார். 13 ஆண்டுகளுக்குப் பின்னர் 1904ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் சோதனை போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டு, 1936ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக கூடைப்பந்து விளையாட்டு கொண்டுவரப்பட்டது.
🏈 1898ஆம் ஆண்டு நெய்ஸ்மித், கேன்சஸ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகவும், முதல் கூடைப்பந்து பயிற்றுனராகவும் பணியாற்றினார். இவர் 1939ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி தனது 78வது வயதில் மறைந்தார்.
Social Plugin