Type Here to Get Search Results !

ஜுலை7

👉 சர்.சி.வி.இராமன் பிறந்த தினம்

👉 மேரி கியூரி பிறந்த தினம்

👉 கிருபானந்த வாரியார் நினைவு தினம்


🌷 1954ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி இந்திய திரைபடத்துறையில் முக்கிய பங்காற்றிய நடிகர் கமல்ஹாசன் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் பிறந்தார்.

🌷 1665ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி உலகின் மிகப் பழமையான தி லண்டன் கசெட், முதலாவது இதழ் வெளியானது.

🌷 1910ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி உலகின் முதலாவது விமான தபால் சேவை ரைட் சகோதரர்களால் ஒகையோவில் ஆரம்பிக்கப்பட்டது.


சர்.சி.வி.இராமன்

🌷 உலகம் போற்றும் இந்திய அறிவியல் மேதை சர் சந்திரசேகர வெங்கட ராமன் 1888ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலுள்ள திருவானைகாவல் என்னும் ஊரில் பிறந்தார்.

🌷 அந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் அறிவியல் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் இல்லாததால், கொல்கத்தாவில் நிதித்துறை துணை தலைமை கணக்கராக பணியில் சேர்ந்தார். மகேந்திரலால் சர்க்கார் நிறுவிய இந்திய அறிவியல் வளர்ச்சி கழகத்தில் பகுதி நேரமாக வேலை செய்தார். இசைக்கருவிகளின் அதிர்வுகள், ஒளிச் சிதறல் பற்றி ஆய்வுகளை செய்தார்.

🌷 ஒளி ஒரு பொருளில் ஊடுருவிச் செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர்.

🌷 இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு 1930ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இந்தியாவில் மட்டுமே படித்த ஒருவர் நோபல் பரிசு பெற்றது அதுவே முதல் முறையாகும்.

🌷 இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1954ஆம் ஆண்டு இவருடைய வாழ்நாளிலேயே அளிக்கப்பட்டது. 1957ஆம் ஆண்டு அகில 'உலக லெனின் பரிசு' அளிக்கப்பட்டது. பெரும் புகழ்பெற்ற இந்திய அறிவியல் அறிஞர் சர்.சி.வி.இராமன் தன்னுடைய 82வது வயதில் (1970) மறைந்தார்.


மேரி கியூரி

🌷 ஒவ்வொரு பெண்ணிற்கும் உதாரணமாக திகழும் அறிவியல் மேதை மேரி கியூரி 1867ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி போலாந்தின் வார்சா நகரில் பிறந்தார்.

🌷 இவர் ரேடியம், பொலோனியம், தோரியம் போன்ற கதிர்வீச்சு தனிமங்களை கண்டுபிடித்துள்ளார். பிறகு உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு சிகிச்சை அளிக்க ரேடியம் பயன்படுத்தப்பட்டது. அதனை 'கியூரி தெரபி' என்று அழைத்தனர்.

🌷 இவருடைய சாதனைகள் கதிரியக்கம் பற்றிய ஓர் கோட்பாடு, கதிரியக்க ஐசோடோப்புகளை பிரித்தெடுக்கும் நுட்பங்கள் ஆகியனவாகும். இவர் இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக நோபல் பரிசை 1903, 1911ஆம் ஆண்டுகளில் பெற்றுள்ளார்.

🌷 மருத்துவ துறையில் மேன்மையை ஏற்படுத்திய மேரி கியூரி தனது 66வது வயதில் (1934) மறைந்தார்.


கிருபானந்த வாரியார்

🌷 சுவாரஸ்யமான, எளிய நடையில் ஆன்மிகக் கருத்துகளை பரப்பிய திருமுருக கிருபானந்த வாரியார் 1906ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த காங்கேயநல்லூரில் பிறந்தார்.

🌷 இவருடைய தந்தை ஒருமுறை, தான் ஒப்புக்கொண்ட சொற்பொழிவுக்கு செல்ல இயலாததால், இவரை அனுப்பி வைத்தார். மடைதிறந்த வெள்ளமாகப் பெருக்கெடுத்த 18 வயது இளைஞனின் சொல்லாற்றல் அவையோரை மெய்மறக்கச் செய்தது. இவருக்கு முதல் சொற்பொழிவே பேரும் புகழும் பெற்றுத் தந்தது.

🌷 குழந்தைகளுக்கு தாயின் பெயரை முதலெழுத்தாகப் போட வேண்டும் என்பதை முதன்முதலாகக் கூறியவர் இவர்தான். எம்.ஜி.ஆருக்கு 'பொன்மனச் செம்மல்' என்ற பட்டத்தை சூட்டியது இவர்தான். ஆன்மிக அறப்பணிகளுக்காக ஏராளமான விருதுகள் பெற்றவர். இவருக்கு சென்னை தமிழிசை மன்றம் 'இசைப் பேரறிஞர்' பட்டம் வழங்கி சிறப்பித்தது.

🌷 வாழ்நாள் முழுவதும் ஆன்மிகச் சொற்பொழிவுகள் மூலம் பக்தி, நன்னெறியை மக்களிடையே வளர்த்தார். சிவனருட்செல்வர், கந்தவேல் கருணை, ராமகாவியம், மகாபாரதம் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட நூல்கள், 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.

🌷 செந்தமிழ்க் கடல், அருள்மொழி அரசு, திருப்புகழ் ஜோதி என்றெல்லாம் போற்றப்பட்ட திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் 87வது வயதில் 1993ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி விமானப் பயணத்தின் போது மறைந்தார்.