Type Here to Get Search Results !

டிசம்பர் 9

👉 சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்


🌷 1946ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி இந்திய தேசியக் காங்கிரஸின் தலைவர் சோனியா காந்தி இத்தாலியில் பிறந்தார்.

🌷 1868ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி வேதிப் போர்முறையின் தந்தை ஃபிரிட்ஸ் ஹேபர் (Fritz Haber) பிறந்தார்.

🌷 1937ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி கலங்கரை விளக்கை உருவாக்கிய நில்ஸ் குஸ்டாப் டேலன் (Nils Gustaf Dalen) மறைந்தார்.

🌷 1946ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி இந்திய சட்டசபை, ராஜேந்திர பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்டது.

🌷 1971ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகள் அமைப்பு ஐ.நா.வில் இணைந்தது.


சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்

🌷 ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் டிசம்பர் 9ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. ஊழலானது நாடுகளின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார பாதிப்புக்களை ஏற்படுத்தி பொருளாதார வீழ்ச்சியை உண்டாக்குகிறது. எனவே இதை தடுக்கும் நோக்கில் 2003ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தின் போது இத்தினத்தை பிரகடனப்படுத்தியது.


வெ.தட்சிணாமூர்த்தி

🌷 கர்நாடக இசைக்கலைஞரும், இசையமைப்பாளருமான வெ.தட்சிணாமூர்த்தி 1919ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி கேரளாவில் பிறந்தார்.

🌷 1948ஆம் ஆண்டு வெளிவந்த 'நல்லதங்காள்' திரைப்படத்தின் மூலம் திரைப்பட உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த திரைப்படம் தமிழிலும் அப்போது வெளியானது. 'ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையிசை உலகில் மிகவும் பிரபலமான தட்சிணாமூர்த்தி ஏராளமான தமிழ் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

🌷 இவர் மலையாளப்பட உலகில் 4 தலைமுறை படங்களுக்கு இசை அமைத்த பெருமைக்குரியவர். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இசை அமைத்துள்ளார்.

🌷 இவர் சிறந்த இசையமைப்பாளருக்கான கேரளா மாநில திரைப்பட விருது, சுவர்ணமால்யா யேசுதாசு விருது, கேரளா மாநிலத்தின் தானியல் வாழ்நாள் சாதனை விருது, மகாத்மாகாந்தி பல்கலைக்கழகத்தின் கௌரவ முனைவர் பட்டம் ஆகியவற்றை பெற்றுள்ளார்.

🌷 நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசை அமைத்த பெருமைக்குரிய இவர் தன்னுடைய 93வது வயதில் (2013) காலமானார்.