Type Here to Get Search Results !

ஜனவரி 26

👉 இந்திய குடியரசு தினம்

👉 சர்வதேச சுங்க தினம்


🌷 1895ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி கணிதவியலாளர் கெய்லி மறைந்தார்.

🌷 1823ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி ஆங்கிலேய மருத்துவர் மற்றும் அம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவருமான எட்வர்ட் ஜென்னர் மறைந்தார்.

🌷 1965ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி இந்தி, இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியானது.


இந்திய குடியரசு தினம்

🌷 இந்திய விடுதலைக்குப் பிறகு மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையாளம் எனக் கருதி, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.


சர்வதேச சுங்க தினம்

🌷 சர்வதேச சுங்க அமைப்பு அமைக்கப்பட்டு, அதனுடைய முதல் நிர்வாகக் கூட்டம் ஜனவரி 26, 1953ஆம் ஆண்டில் புருசெல்ஸில் நடைபெற்றது. அதில் 17 ஐரோப்பிய நாடுகள் கலந்துகொண்டன. அதன்பின்னர் 160க்கும் மேற்பட்ட சுங்க அதிகாரிகள் உள்பட சுங்கத்துறையினர் இந்த அமைப்பில் இணைந்தனர். அத்தகைய சுங்க அமைப்பு தொடங்கப்பட்ட ஜனவரி 26ஆம் தேதி சர்வதேச சுங்க தினமாக கொண்டாடப்படுகிறது.


காருல் யோவான்

🌺 சுவீடன், நார்வே மன்னர் காருல் யோவான் 1763ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி பிரான்ஸ் நாட்டில் பிறந்தார்.

🌺 இவர் சுவீடன் மற்றும் நார்வே நாடுகளின் மன்னராக ஆட்சி புரிந்தவர். இவரது இயற்பெயர் சீன் பெருனதோத்து ஆகும்.

🌺 தென் இத்தாலியில் உள்ள போன்தேகொர்வோவின் முதல் இளவரசர் இவர் தான்.

இவர் தன்னுடைய 81வது வயதில் 1844ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி மறைந்தார்.