Type Here to Get Search Results !

ஜனவரி 27

👉 உலக தொழுநோய் ஒழிப்பு தினம்

👉 சர்வதேச படுகொலை நினைவு தினம்


🌷 1756ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி இசை வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற இசைமேதை மொஸார்ட், ஆஸ்திரியாவில் பிறந்தார்.

🌷 2009ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி இந்தியாவின் 8வது குடியரசுத் தலைவர் ரா.வெங்கட்ராமன் அவர்கள் மறைந்தார்.

🌷 1880ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி தாமஸ் ஆல்வா எடிசன் வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் பெற்றார்.


உலக தொழுநோய் ஒழிப்பு தினம்

🌷 உலக தொழுநோய் ஒழிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை (27.01.2019) கடைபிடிக்கப்படுகிறது.

🌷 தொழுநோய் குணப்படுத்தக்கூடிய நோய். ஆனால் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். தொழுநோயாளிகள் மீது அக்கறையும், கருணையும் ஏற்படவும், அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்துவதும் இத்தினத்தின் நோக்கமாகும்.

🌷 தொழுநோயாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் ஐ.நா. பொதுச்சபை இச்சட்டத்தை இயற்றியுள்ளது.


சர்வதேச படுகொலை நினைவு தினம்

🌷 இரண்டாம் உலக போரின்போது ஐரோப்பாவில் வாழ்ந்த யூத மக்களுக்கு எதிராக ஹோலோகாஸ்ட் எனப்படும் யூத இன ஒழிப்பு மற்றும் படுகொலையை நாஜிக்கள் செய்தனர்.

🌷 சுமார் 60 லட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1945ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி அன்று நாஜி மரண முகாமில் மீதமிருந்த யூதர்களை சோவியத் படைகள் விடுவித்தது.

🌷 இதுபோன்ற இனப்படுகொலைகள் மீண்டும் நடக்காமல் இருக்க ஐ.நா.அமைப்பு 2005ஆம் ஆண்டிலிருந்து இத்தினத்தை கடைப்பிடிக்கிறது.


சாமுவேல் கோம்பர்ஸ்

🌷 அமெரிக்காவின் முக்கிய தொழிற்சங்கத் தலைவரான சாமுவேல் கோம்பர்ஸ் 1850ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.

🌷 குடும்ப வறுமை காரணமாக 10 வயதில் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு, சுருட்டு தயாரிப்பவரிடம் வேலைக்குச் சேர்ந்தார். பின்னர், 1864-ல் நியூயார்க் நகர சுருட்டுத் தயாரிப்பாளர் சங்கத்தில் சேர்ந்தார்.

🌷 1881-ல் ஒழுங்கமைக்கப்பட்ட வர்த்தகம் மற்றும் தொழிலாளர் யூனியன்களின் கூட்டமைப்பை உருவாக்க உதவியாக இருந்தார். 1886-ல் அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பாக (American Federation of Labor) இது மறு உருவாக்கம் செய்யப்பட்டு, அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.

🌷 தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் கிடைக்கவும், அவர்களது வாழ்வாதாரம் மேம்படவும் பாடுபட்டார். 1919-ல் பாரீஸ் அமைதி மாநாட்டில் தொழிலாளர் பிரச்சனைகளுக்கான அதிகாரப்பூர்வ ஆலோசகராக கலந்துகொண்டார்.

🌷 சமூக மக்கள் அனைவருக்கும் இயற்கை வளங்களும், வாய்ப்புகளும் சமமானவை என்ற பொருளாதார தத்துவத்தைக் கொண்டிருந்த சாமுவேல் கோம்பர்ஸ் 74-வயதில் (1924) மறைந்தார்.


லூயிஸ் கரோல்

🌷 உலகப் புகழ்பெற்ற 'ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட்' குழந்தைகள் நாவலைப் படைத்த லூயிஸ் கரோல் 1832ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி இங்கிலாந்தின் செ‘யர் பகுதியில் உள்ள டாரஸ்பரி கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் சார்லஸ் லுட்விக் டாட்ஸன்.

🌷 இவர் 'த்ரூ தி லுக்கிங் கிளாஸ் அண்ட் வாட் ஆலிஸ் ஃபவுண்ட் தேர்' என்ற 2-வது பகுதியை எழுதினார். இவை இங்கிலாந்தின் மிகவும் பிரபலமான குழந்தைகள் நூல்களாகக் கொண்டாடப்பட்டன.

🌷 மேலும் இவர் கணிதப் பேராசிரியர், கவிஞர், புகைப்படக் கலைஞர் என்று பலவிதமாக அறியப்பட்டாலும் குழந்தைகளுக்கான எழுத்தாளர் என்று கூறப்படுவதையே அதிகம் விரும்பியவர்.

🌷 குழந்தைகள் இலக்கியத்தின் சிறந்த படைப்பாளியாகப் போற்றப்படும் லூயிஸ் கரோல் தனது 66-வது வயதில் (1898) மறைந்தார்.