Type Here to Get Search Results !

January 13

👉 ராகேஷ் ஷர்மா பிறந்த தினம்


🍀 1610ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி கலீலியோ கலிலி வியாழனின் 4வது துணைக்கோளைக் கண்டுபிடித்தார்.

🍀 1930ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி மிக்கி மவுஸ் கார்ட்டூன் துணுக்குகளாக முதன்முதலாக வெளிவரத் தொடங்கியது.


வில்லெம் வீன்

👉 வில்லெம் வீன் என்றழைக்கப்படும் வில்ஹெல்ம் கார்ல் வெர்னர் ஓட்டோ ஃப்ரிட்ஸ் பிரான்ஸ் வீன் 1864ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி பிரஷ்யாவில் பிறந்தார்.

👉 இவர் வெப்பவியல், மின்காந்தவியல் துறைகளில் முக்கியக் கோட்பாடுகளை உருவாக்கியவர். 1911ஆம் ஆண்டு வெப்பக் கதிர் வீச்சு பற்றிய ஆய்வுகளுக்காக இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெற்றார். இவர் 1928ஆம் ஆண்டு 64ஆவது வயதில் மறைந்தார்.


ராகேஷ் ஷர்மா

🌟 விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற ராகேஷ் ஷர்மா 1949ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா மாவட்டத்தில் பிறந்தார்.

🌟 இவர் 1970ஆம் ஆண்டு இந்திய விமானப் படையில் பயிற்சி பைலட்டாகப் பணியேற்றார். ஒரு விண்வெளி வீரராக அவருடைய பயணம் 1982ஆம் ஆண்டு செப்டம்பர் 20 அன்று தொடங்கியது.

🌟இதன் விளைவாக ராகேஷ், 1984ஆம் ஆண்டு ஏப்ரல் 2 அன்று சரித்திரத்தின் சாதனைப் பக்கத்தில் இடம் பிடித்தார். பிறகு சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பைலட்டாக இருந்த அனுபவத்தின் காரணமாக 1984ஆம் ஆண்டில் விமானப் படைப்பிரிவின் ஒரு குழுவுக்கு ராகேஷ் தலைவராக நியமிக்கப்பட்டார்.

🌟 இவரும், ரஷ்ய விண்வெளி வீரர்கள் இருவரும் சோயுஸ் டி 11 விண்கலத்தில் விண்வெளிக்குப் பயணம் சென்றார்கள். சல்யூட் 7 என்னும் விண்வெளி மையத்தில் இவர் எட்டு நாட்கள் தங்கியிருந்தார். ராகேஷ் சர்மா அவர்களின் பணிகளை பாராட்டி அசோகா சக்ரா விருது கிடைத்தது.


ஆர்.பாலச்சந்திரன்

✍ கவிஞர் பாலா என அழைக்கப்படும் ஆர்.பாலச்சந்திரன் 1946ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி சிவகங்கையில் பிறந்தார்.

✍ இவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேலும் இவர் சாகித்திய அகாடமியின் நிர்வாக்குழு உறுப்பினராக இருந்தார்.

✍ சர்ரியலிசம், பாரதியும் கீட்சும் ஆகிய புத்தகங்கள் தமிழ் இலக்கியத்திற்கு இவரின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் ஆகும்.

✍ கல்வியாளர், கவிஞர், எழுத்தாளர், பேராசிரியர் என பன்முகத்திறமை கொண்ட இவர் தன்னுடைய 63வது வயதில் (2009) மறைந்தார்.