👉 மார்ட்டின் லூதர் கிங் பிறந்த தினம்
👉 தேவநேயப் பாவாணர் நினைவு தினம்
👉 2001ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி விக்கிப்பீடியா துவங்கப்பட்டது.
👉 2005ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி மொபைலில் எஸ்.எம்.எஸ்., அனுப்புவதற்கான சாஃப்ட்வேர் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
👉 1998ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி முன்னாள் இந்தியப் பிரதமர் குல்சாரிலால் நந்தா மறைந்தார்.
👉 1981ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் மறைந்தார்.
👉 2005ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி மொபைலில் எஸ்.எம்.எஸ்., அனுப்புவதற்கான சாஃப்ட்வேர் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
👉 1998ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி முன்னாள் இந்தியப் பிரதமர் குல்சாரிலால் நந்தா மறைந்தார்.
👉 1981ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் மறைந்தார்.
🌹 ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15ஆம் தேதி இந்திய ராணுவ தினமாகக் கொண்டாடப்படுகிறது.
🌹 இந்த நாளை ராணுவ தினமாகத் தேர்ந்தெடுத்ததற்கு காரணம் இந்தியாவின் முதல் ராணுவ தளபதியாக ஜெனரல் கே.எம். கரியப்பா (K.M. Cariappa) 1949ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதிதான் பதவி ஏற்றார். அதற்கு முன்புவரை பிரிட்டிஷ்காரர்களே தளபதிகளாக இருந்து வந்தார்கள். இவர் ராணுவ வாழ்க்கையில் தனது இறுதி மூச்சு வரை நாட்டிற்காக தன்னலமற்ற சேவை புரிந்தவர்.
🌟 அமெரிக்காவில் அடிமை முறையையும், நிற வேறுபாட்டையும் ஒழிக்க முதன் முதலாகக் குரல் கொடுத்த மார்ட்டின் லூதர் கிங் 1929ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி அமெரிக்காவில் அட்லாண்டா நகரில் பிறந்தார்.
🌟 இவர் காந்திய வழியில் வன்முறையற்ற அறப்போராட்டங்களை நடத்தியதால், அமெரிக்க முற்போக்கு வரலாற்றில் ஒரு தேசிய சின்னமாகக் கருதப்படுகிறார். 1964ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு மார்டின் லூதர் கிங்குக்கு வழங்கப்பட்டது.
🌟 உலகம் முழுவதும் புகழ்பெற்ற மார்டின் லூதர் கிங் தன்னுடைய 39வது வயதில் (1968) மறைந்தார்.
💣 ஹைட்ரஜன் குண்டின் தந்தை என்று அழைக்கப்படும் அமெரிக்க இயற்பியல் ஆராய்ச்சியாளர் எட்வர்டு டெல்லர் 1908ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் பிறந்தார்.
💣 இவர் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்று, டென்மார்க்கு சென்று விஞ்ஞானி நீல்ஸ் போரிடம் அணுவியல் குறித்து கற்றார். இவர் விஞ்ஞான மேதை ஜார்ஜ் காமோவுடன் இணைந்து அணுக்கரு இயற்பியல், தெர்மோ நியூக்ளியர் இயக்கங்கள் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
💣 இவரது முக்கிய பங்களிப்புடன் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் குண்டு 1952ஆம் ஆண்டு பசிபிக் கடல் பகுதியில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இவர் கௌரவம் வாய்ந்த பிரசிடென்ட் மெடல் ஆஃப் ஃப்ரீடம் உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
💣 இறுதிவரை பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவந்த எட்வர்டு டெல்லர் 95வது வயதில் (2003) மறைந்தார்.
✍ மொழிஞாயிறு என்று போற்றப்படும் தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் 1902ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்தார். இவரின் இயற்பெயர் தேவநேசன்.
✍ 1925ஆம் ஆண்டு சிறுவர் பாடல் திரட்டு என்ற இவரது முதல் நூல் வெளிவந்தது. இவர் 40-க்கும் மேற்பட்ட நூல்கள், 150-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதியுள்ளார்.
✍ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இந்திய மொழிகள், ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், கிரேக்கம் ஆகிய வெளிநாட்டு மொழிகள் உட்பட 17 மொழிகளின் இலக்கணங்களைக் கற்றவர்.
✍ இவர் 1974ஆம் ஆண்டு தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தின் (Tamil Etymological Project) முதல் இயக்குநராகப் பொறுப்பேற்று முத்திரை பதித்தவர்.
✍ இவர் 'உலகத்தின் முதல் மொழி தமிழ். உலகின் முதல் மனிதன் தமிழன்', 'தமிழ் திராவிட மொழிகளுக்கு தாய்' என்று கூறியவர். தமிழுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட தேவநேயப் பாவாணர் தனது 78வது வயதில் 1981ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி மறைந்தார்.
Social Plugin