Type Here to Get Search Results !

January 21

👉 இந்திய விஞ்ஞானி எம்.ஆர்.எஸ்.ராவ் பிறந்த தினம்


🌐 1924ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி சோவியத்தின் தலைவர் விளாதிமிர் லெனின் மறைந்தார்.


எம்.ஆர்.எஸ்.ராவ்

🌷 இந்திய விஞ்ஞானி எம்.ஆர்.எஸ்.ராவ் 1948ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி மைசூரில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் எம்.ரங்கசாமி சத்யநாராயண ராவ் ஆகும்.

🌷 இவர் நூற்றுக்கணக்கான சர்வதேச பத்திரிக்கை கட்டுரைகளை எழுதியுள்ளார். மேலும் இவர் குரோமட்டின் உயிரியல் மற்றும் புற்றுநோய் உயிரியல் பற்றிய ஆராய்ச்சிகளில் அதிக கவனம் செலுத்தினார்.

🌷 இவருடைய வெளியீடான பெருங்குடல் புற்றுநோய் பற்றிய விளக்கங்கள் செல் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இவருக்கு இந்திய அரசால் அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் (2010) பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. மேலும் இவர் பல பதக்கங்கள் மற்றும் விருதுகளை பெற்றுள்ளார்.


பெலிக்ஸ் ஹாஃப்மேன்

🌹 ஆஸ்பிரின் (Aspirin) மருந்தைத் தயாரித்தவரான பெலிக்ஸ் ஹாஃப்மேன் 1868ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி ஜெர்மனியில் உள்ள லூட்ஸ்விக்ஸ்பெர்க் என்ற ஊரில் பிறந்தார்.

🌹 சிறுவனாக இருந்த சமயத்தில் இவருடைய தந்தை மூட்டுவலியால் அவதிப்பட்டதை பார்த்து, படித்து முடித்ததும் அதற்கான மருந்தை 1897ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.

🌹 முதலில் பவுடராகத் தயாரிக்கப்பட்ட இவரது மருந்து, பின்னர் மாத்திரை வடிவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. குறைந்த செலவில் தயாரிக்கும் முறையும் மேம்படுத்தப்பட்டு, குறைந்த விலையிலும் விற்கப்பட்டது. உலகம் முழுவதும் அதிவேகமாக இது பிரபலமடைந்தது.

🌹 இதுவரை தயாரித்து விற்பனை செய்யப்பட்ட மருந்துகளிலேயே அதிகளவு வெற்றி பெற்றது ஆஸ்பிரின்தான் என்று கூறப்படுகிறது. (இம்மருந்து பொதுவாக சிறிய வலிகளுக்கு எதிரான வலிநீக்கியாக பயன்படுகிறது).

🌹 இந்த மருந்து நல்ல பலனையும் கொடுத்தது. இதன் வேதியியல் பெயர் அஸிடைல்சாலிசிலிக் (Acetylsalicylic) ஆசிட் ஆகும். மருத்துவ மேதை பெலிக்ஸ் ஹாஃப்மேன் 78வது வயதில் (1946) மறைந்தார்.


👉 1945ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ராஷ் பிஹாரி போஸ் மறைந்தார்.