🌷 2004ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி கூகுள் நிறுவனத்தின் சமூக வலையமைப்பு ஆர்க்குட் (Orkut) தொடங்கப்பட்டது.
🌷 1984ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி ஆப்பிள் மக்கின்டொஷ் கணினி அறிமுகப்படுத்தப்பட்டது.
🌷 1984ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி ஆப்பிள் மக்கின்டொஷ் கணினி அறிமுகப்படுத்தப்பட்டது.
✍ தமிழ் நூற்கடல் என்று போற்றப்பட்ட தி.வே.கோபாலையர் 1925ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிறந்தார்.
✍ இவர் இலக்கணம், இலக்கியம், சமய நூல்கள் குறிப்பாக வைணவ இலக்கியங்களை கற்றறிந்தவர். மேலும் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பிரெஞ்ச் மொழிகளில் புலமைமிக்கவர்.
✍ எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், இலக்கணக் கொத்து உரை, பிரயோக விவேகம், வீர சோழிய உரை உள்ளிட்ட பல அரிய நூல்களைப் பதிப்பித்தவர். மேலும் தொல்காப்பியச் சேனாவரையம், கம்பராமாயணத்தில் முனிவர்கள், சீவக சிந்தாமணி காப்பிய நலன், பாலகாண்டம், சுந்தரகாண்டம் உள்ளிட்ட பல நூல்களைப் படைத்தார்.
✍ செந்தமிழ்க் கலாநிதி, சைவ நன்மணி, அறிஞர் திலகம், சிந்தாமணிக் களஞ்சியம், சாகித்திய வல்லப, பொங்கு தமிழ் விருது போன்ற ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.
✍ பழந்தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் அழிய நேர்ந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. தி.வே.கோபாலையர் இருந்தால் போதும் அவரது நினைவில் இருந்தே அனைத்து நூல்களையும் பதிப்பித்துவிட முடியும் என்று பல தமிழ் அறிஞர்களாலும் போற்றப்பட்ட இவர் 82வது வயதில் (2007) மறைந்தார்.
✍ புனைவியல் இயக்கத்தின் முக்கியமானவர்களுள் ஒருவரான ஜார்ஜ் கோர்டன் பைரன் 1788ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி லண்டன், ஹோலஸ் ஸ்ட்ரீட் என்ற இடத்தில் பிறந்தார்.
✍ இவர் Childe Harolds Pilgrimage என்னும் தனது சுயசரிதைக் கவிதையை வெளியிட்டார். வெளிவந்த உடனே இது மகத்தான வெற்றி பெற்றது. அதன் பிறகு தொடர்ந்து கவிதைகளை வெளியிட்டார்.
✍ இவரின் தி புரோபசி ஆஃப் டான்டெ, டான் ஜுவன் மற்றும் கவிதை நாடகங்களான ஃபெலியரோ, சர்டான்பாலஸ், தி டு ஃபோஸ்காரி ஆகிய பல படைப்புகள் 1821ஆம் ஆண்டு வெளிவந்தன.
✍ இவர் துருக்கிக்கு எதிராக கிரேக்க விடுதலைப் போரில் உதவி செய்தார். அதனால் கிரேக்கர்கள் இவரை ஒரு தேசிய வீரனாக கொண்டாடினர்.
✍ ஆங்கில-ஸ்காட்டிய புனைவியல் இயக்கக் கவிஞர்களில் முக்கியமானவராகப் போற்றப்பட்ட இவர் உடல்நிலை பாதிப்பால் 1824ஆம் ஆண்டு கிரேக்க நாட்டின் மிசோலோங்கியில் 36வது வயதில் மறைந்தார்.
🌟 இந்தியாவில் முகலாய சாம்ராஜ்யத்தின் மன்னராக திகழ்ந்த ஷாஜகான் 1592ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி பாகிஸ்தானின் லாஹூரில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் ஹாபுதீன் முகம்மது ஷாஜகான்.
🌟 1627ஆம் ஆண்டில் தன்னுடைய தந்தை இறந்ததை தொடர்ந்து இவர் முகலாய பேரரசின் மன்னராக அரியணை ஏறினார். மேலும் இவருடைய ஆட்சி முகலாயர்களின் பொற்காலம் என அழைக்கப்படுகிறது.
🌟 ஷாஜகான் எழுப்பியுள்ள நினைவுச்சின்னங்களில் தாஜ்மஹால் மிகவும் பிரபலமானது. இது இவருடைய மனைவி மும்தாஜின் நினைவாக கட்டப்பட்டது.
🌟 433 ஈரோஸ் என்ற சிறுகோள் மீதுள்ள ஒரு நிலக்குழிக்கு ஷாஜகான் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது. இவர் 1666ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி (74வது வயதில்) மறைந்தார்.
Social Plugin