Type Here to Get Search Results !

January 4

👉 லூயி பிரெயில் பிறந்த தினம்

👉 1809 – லூயி பிரெயில், பிறந்தார்


👉 1958ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி முதலாவது செயற்கைக் கோள் ஸ்புட்னிக் 1 தனது சுழற்சிப் பாதையை விட்டு விலகி பூமியில் வீழ்ந்தது.

👉 1959ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி லூனா 1 சந்திரனுக்கு மிக அருகில் சென்றது.

👉 1643ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி ஆங்கிலக் கணிதவியலாளரும், அறிவியலாளருமான ஐசாக் நியூட்டன் பிறந்தார்.

👉 1854ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி வில்லியம் மெக்டொனால்ட், மெக்டொனால்ட் தீவுகளை கண்டுபிடித்தார்.


லூயி பிரெயில்

🌟 இருளின் சிறையில் இருந்தவர்களுக்கு வெளிச்சம் கொடுத்த லூயி பிரெயில் 1809ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி பிரான்ஸில் பிறந்தார். இவருடைய பிறந்த தினமே சர்வதேச பிரெயில் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

🌟 லூயி மூன்று வயதில் தன்னுடைய தந்தையின் பட்டறையில் விளையாடி கொண்டியிருக்கும் போது ஊசி அவருடைய கண்ணில் பட்டு பார்வையை இழந்தார். அதன்பின் மற்றொரு கண்ணிலும் பரிவுக்கண் நோய் ஏற்பட்டு பார்வையை இழந்தார்.

🌟 இவருக்கு பார்வை திறன் இல்லாவிட்டாலும், புரிந்துகொள்ளும் சக்தி அதிகமாக இருந்தது. எனவே 1819ஆம் ஆண்டு விழி இழந்த இளைஞருக்கான நிறுவனத்தில் பிரெயில் சேர்க்கப்பட்டார்.

🌟 லூயி படிக்கும் நிறுவனத்திற்கு பிரான்ஸ் ராணுவத்தில் கேப்டனாக இருந்து ஓய்வு பெற்ற சார்லஸ் பார்பியா என்பவர் வருகை தந்து எந்த ஒளியையும் பயன்படுத்தாமல் தகவல்களை பரிமாற்றம் செய்யும் முறையை (நைட் ரைட்டிங்) விளக்கினார். இது விரல்களால் பேப்பரைத் தடவிப்பார்த்து எண்ணங்களை பரிமாற்றம் செய்யும் முறை.

🌟 பிரெயில், இந்தப் புதிய முறையைக் கற்றுக்கொண்டு, அதில் சில முன்னேற்றங்களையும் கொண்டு வந்தார். கடைசியாக புள்ளிகளை எண்ணி எண்ணி எழுத்துக்களை புரிந்துகொள்ளும் பிரெயில் முறையை உருவாக்கினார். பிரெயிலின் இந்த புதிய முறையை விளக்கும் முதல் புத்தகம் 1820ஆம் ஆண்டுகளின் இறுதியில் வெளியிடப்பட்டது. ஆனால் அதற்கான அங்கீகாரம் அப்போது கிடைக்கவில்லை.

🌟 1932ஆம் ஆண்டு கூடிய சர்வதேச மாநாட்டில் தான் பிரெயில் முறைக்கு அதிகாரபூர்வமான அங்கீகாரத்தை வழங்கியது. இவர் தனது 43வது வயதில் (1852) மறைந்தார்.


ஜே.சி.குமரப்பா

🌹 வளம் கொடுக்கும் பொருளியல் மாதிரியை வடிவமைத்த ஜே.சி.குமரப்பா 1892ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி தஞ்சாவூரில் பிறந்தார்.

🌹 இவர் இந்தியாவின் ஏழ்மை நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்தியாவின் ரத்தத்தை எப்படியெல்லாம் பிரிட்டிஷ் அரசு சுரண்டுகிறது என்பதை அறிந்தார். தனது ஆராய்ச்சிக் கட்டுரையை காந்திஜியின் முகவுரை வேண்டி அவருக்கு அனுப்பினார். இதுவே இருவருக்கும் நெருக்கம் ஏற்படக் காரணமாக அமைந்தது.

🌹 இவருடைய நூல்கள் பலவற்றுக்கு காந்திஜி முன்னுரை எழுதியுள்ளார். இவர் தன்னுடைய 68-வது வயதில் (1960) மறைந்தார்.


ஜி.டி.நாயுடு

👉'இந்தியாவின் எடிசன்' என்று போற்றப்பட்ட சிறந்த அறிவியல் மேதையும், மகத்தான கண்டுபிடிப்பாளருமான ஜி.டி.நாயுடு (கோபால்சாமி துரைசாமி நாயுடு) 1893ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம், கலங்கல் கிராமத்தில் பிறந்தார்.

👉இவர் அதிகம் படிக்கவில்லை என்றாலும் பல நூல்களை வாங்கிப் படித்து அறிவை வளர்த்துக்கொண்டார். இவர் 18 வயதில் அமெரிக்காவில் தயாராகும் வலி நிவாரணியை அங்கிருந்து வரவழைத்து, இங்கு விற்பனை செய்தார். அதில் லாபமும் கிடைத்தது.

👉பிறகு இவர் பைக்கை, பக்கவாட்டில் இன்னொருவர் அமரும் வகையில் வடிவமைத்தார். திருப்பூரில் பருத்தி ஆலை தொடங்கினார். இதன் மூலம் பெரும் தொழிலதிபராக உயர்ந்தார். அதன்பின் தொழிலில் எதிர்பாராதவிதமாக நஷ்டம் ஏற்பட்டது. பிறகு போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டு பொள்ளாச்சி பழநி இடையே பஸ் சர்வீஸ் நடத்தினார்.

👉அதன்பின்பு 'யுனிவர்செல் மோட்டார் சர்வீஸ்' நிறுவனத்தை தொடங்கினார். பேருந்து புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி, பயணச்சீட்டு வழங்கும் கருவி, இன்ஜின் அதிர்வைக் கண்டறியும் கருவி, பழச்சாறு பிழியும் கருவி, வெட்டுக் காயம் இல்லாமல் முகச்சவரம் செய்துக்கொள்ள பிளேடு என தொடர்ந்து பல பொருட்களை உருவாக்கினார்.

👉ஜெர்மனியில் நடந்த பொருட்காட்சியில் இவரது சவரக்கத்தி, பிளேடுக்கு முதல் மற்றும் 3-வது பரிசுகள் கிடைத்தன. இவற்றை தயாரிக்கும் உரிமையை பல நாடுகள் கேட்டும் மறுத்த இவர், இறுதியாக அமெரிக்க நிறுவனத்திற்கு அந்த உரிமையை கொடுத்துவிட்டார்.

👉இவரது தாவர ஆராய்ச்சி முடிவுகள் உலகையே பிரமிக்க வைத்தன. இவரது அதிசய பருத்திச் செடிக்கு 'நாயுடு காட்டன்' என பெயரிட்டு ஜெர்மன் கௌரவித்தது.

👉சாதாரண கிராமத்தில் பிறந்து பல அரிய சாதனைகளை படைத்த ஜி.டி.நாயுடு தனது 80-வது வயதில் 1974ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி மறைந்தார். கோவை அவிநாசி சாலையில் இவரது கண்டுபிடிப்புகளுடன் கூடிய கண்காட்சி, அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.