👉 ரா.கிருஷ்ணசாமி நாயுடு பிறந்த தினம்
👉 1971ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி உலகின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது.
👉 2005ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த வானியல் ஆராய்ச்சிக் குழுவினர் சூரியக் குடும்பத்தில் ஏரிஸ் என்ற புதிய குறுங்கோள் ஒன்றைக் கண்டுபிடித்தனர்.
👉 2005ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த வானியல் ஆராய்ச்சிக் குழுவினர் சூரியக் குடும்பத்தில் ஏரிஸ் என்ற புதிய குறுங்கோள் ஒன்றைக் கண்டுபிடித்தனர்.
🌟 இந்தியாவில் முகலாய சாம்ராஜ்யத்தின் மன்னராக திகழ்ந்த ஷாஜகான் 1592ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி பாகிஸ்தானின் லாஹூரில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் ஹாபுதீன் முகம்மது ஷாஜகான்.
🌟 1627ஆம் ஆண்டில் தன்னுடைய தந்தை இறந்ததை தொடர்ந்து இவர் முகலாய பேரரசின் மன்னராக அரியணை ஏறினார். மேலும் இவருடைய ஆட்சி முகலாயர்களின் பொற்காலம் என அழைக்கப்படுகிறது.
🌟 ஷாஜகான் எழுப்பியுள்ள நினைவுச்சின்னங்களில் தாஜ்மஹால் மிகவும் பிரபலமானது. இது இவருடைய மனைவி மும்தாஜின் நினைவாக கட்டப்பட்டது.
🌟 433 ஈரோஸ் என்ற சிறுகோள் மீதுள்ள ஒரு நிலக்குழிக்கு ஷாஜகான் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது. இவர் 1666ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி (74வது வயதில்) மறைந்தார்.
🌸 விடுதலைப் போராட்ட வீரர் ரா.கிருஷ்ணசாமி நாயுடு 1902ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் புது.ராமச்சந்திரபுரம் என்ற கிராமத்தில் பிறந்தார்.
🌸 இவர் 1922ஆம் ஆண்டு காங்கிரஸ் மகாசபையில் சேர்ந்தார். 1930ஆம் ஆண்டு சட்டமறுப்பு இயக்கம், 1940ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாக்கிரகம், 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் இயக்கம் ஆகியவற்றில் கலந்துக் கொண்டு சிறைக்குச் சென்றுள்ளார்.
🌸 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்களில் மூன்றுமுறை போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றார். 1952ஆம் ஆண்டு முதல் 1967ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 1968ஆம் ஆண்டு முதல் 1973ஆம் ஆண்டு வரை சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தார்.
🌸 1924ஆம் ஆண்டிலிருந்து அன்றைய காங்கிரஸ் இயக்கத்தில் பல பொறுப்புகளை வகித்து இறுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் உயர்ந்தார்.
🌸 1959ஆம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராகவும், 1962ஆம் ஆண்டு முதல் 1967ஆம் ஆண்டு வரை அதன் தலைவராகவும் இருந்தார். 15 ஆண்டுகள் சட்டப் பேரவையில் ஆளும்கட்சி உறுப்பினராகப் பதவி வகித்தார்.
🌸 நேர்மையான, எளிமையான, பண்பான அரசியல் தலைவராக தனது இறுதிமூச்சு வரை வாழ்ந்த இவர் தன்னுடைய 72வது வயதில் (1973) மறைந்தார்.
Social Plugin