Type Here to Get Search Results !

ஏப்ரல் 1

👉 இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்ட தினம்

👉 முட்டாள்கள் தினம்

👉 முன்னாள் இந்திய துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி பிறந்த தினம்


🌷 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி தமிழ் நூற்கடல் என்று போற்றப்பட்ட தி.வே.கோபாலையர் மறைந்தார்.

🌷 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி கூகுளின் ஜிமெயில் மின்னஞ்சல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

🌷 1957ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி இந்தியாவில் நயா பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.

🌷 1935ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.


முட்டாள்கள் தினம்

😜 முட்டாள்கள் நாள், ஏப்ரல் முதலாம் நாள் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் புத்தாண்டு தினம் ஏப்ரல் 1ஆம் தேதி கொண்டாடப்பட்டு வந்தது.

😜 பின்னர் 1562ஆம் ஆண்டளவில் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்புமுறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்புமுறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது.

😜 ஜனவரி முதலாம் தேதியை புத்தாண்டாகக் கொண்டாட தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்ரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை முட்டாள்கள் என்று அழைத்தார்கள். இதிலிருந்து ஏப்ரல் முதல் நாள் முட்டாள்கள் தினமாக ஆரம்பமாயிற்று.


முகமது ஹமீத் அன்சாரி

🌷 முன்னாள் இந்திய துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி அவர்கள் 1937ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார்.

🌷 இவர் 1961ஆம் ஆண்டு இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று வெளியுறவுத் துறையில் பணியில் சேர்ந்தார். மேலும் ஆஸ்திரேலியாவிற்கான இந்திய தூதர், ஐக்கிய அரபு நாடுகள், ஆப்கானிஸ்தான், ஈரான், சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்கான இந்திய தூதர் ஆகிய பொறுப்புகளை வகித்து வந்தார்.

🌷 ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்த பிரதிநிதியாகவும் இருந்தார். தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவராகவும் இருந்தார். இவருக்கு 1984ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.



பிஸ்மார்க்

🌷 ஜெர்மனியை ஒன்றிணைத்தவரும், இரும்புத் தலைவர் என்று போற்றப்பட்டவருமான ஆட்டோ வான் பிஸ்மார்க் (Otto Von Bismarck) 1815ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி பிரஷ்யாவின் ஷென்ஹாசன் நகரில் (தற்போது ஜெர்மனியில் உள்ளது) பிறந்தார்.

🌷 இவர் 1847-ல் உருவாக்கப்பட்ட பிரஷ்ய சட்டமன்றத்தில் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1861-ல் பிரஷ்ய மன்னர் வில்லியம் இவரை தனது தலைமை அமைச்சராக நியமித்தார்.

🌷 ஜெர்மனியில் தனித்தனியாக இருந்த 39 மாநிலங்களை தனது திறமையால் ஒரே பிரஷ்யத் தலைமையின் கீழ் ஒன்றிணைத்தார். பல போராட்டங்களுக்கு பிறகு, ஜெர்மன் பேரரசின் பிரதமரானார்.

🌷 இவரது வெளியுறவுக் கொள்கைகளின் காரணமாக ஜெர்மனி அபார வளர்ச்சி கண்டது. 1889-ல் முதியோர், ஊனமுற்றோர் காப்பீடு மசோதாவை அறிமுகம் செய்தார்.

🌷 1860 முதல் 1890 வரை ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய அரசியல் விவகாரங்களில் பெரும் ஆதிக்கம் செய்து வந்த ஆட்டோ வான் பிஸ்மார்க் 83வது வயதில் (1898) மறைந்தார்.