Type Here to Get Search Results !

ஏப்ரல் 2

👉 உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்

👉 சர்வதேச சிறுவர் புத்தக தினம்

👉 வ.வே.சு ஐயர் பிறந்த தினம்


🌷 1984ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி ராகேஷ் சர்மா, சோயூஸ் T-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

🌷 1902ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி அமெரிக்காவின் முதல் திரையரங்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திறக்கப்பட்டது.


உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்

💖 உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் ஏப்ரல் 2ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

💖 ஆட்டிசம் என்பது பல்வேறு வகையான மூளை வளர்ச்சிக் குறைபாடுகளைக் கொண்ட நோயாகும். இதனை முற்றிலும் குணப்படுத்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

💖 ஆட்டிசம் என்னும் மூளை வளர்ச்சிக் குறைபாடால் பாதிக்கப்பட்டவர்களை எப்படிக் கையாள வேண்டும்? எந்த முறையில் அனுசரணையாக நடந்து கொள்ளவேண்டும்? என்பதை உணர்த்தும் வகையில் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.


சர்வதேச சிறுவர் புத்தக தினம்

📚 சர்வதேச சிறுவர் புத்தக தினம் 1967ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

📚 வாழ்நாள் முழுவதும் சிறுவர்களுக்காக கதைகளை எழுதிய ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் என்பவரின் பிறந்த நாளும் (ஏப்ரல் 2, 1805) இந்நாளில் நினைவு கூறப்படுகிறது.

📚 மேலும், புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஊக்குவித்தல் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்களின்மீது கவனத்தை ஈர்த்தல் போன்ற நோக்கத்திற்காகவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.


வ.வே.சுப்பிரமணிய ஐயர்

🏁 சுதந்திர போராட்ட வீரரும், தமிழ் நவீன சிறுகதையின் தந்தை எனவும் போற்றப்பட்ட வ.வே.சு. ஐயர் (வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர்) 1881ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலுள்ள வரகனேரியில் பிறந்தார்.

🏁 இவர் 1907ஆம் ஆண்டு லண்டன் சென்றபோது சுதந்திர புரட்சி வீரர்களின் தொடர்பு மூலம், அவர்கள் ரகசியமாக நடத்தி வந்த அபிநவ பாரத் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார்.

🏁 இவர் பட்டமளிப்பு விழாவில் பிரிட்டிஷ் ராஜ விசுவாச பிரமாணம் எடுத்துக் கொண்டால்தான், பட்டம் வழங்கப்படும் என்பதால் அந்த உறுதிமொழியை எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார்.

🏁 இவர் ஸ்ரீ அரவிந்தர், பாரதியார், நீலகண்ட பிரம்மச்சாரி ஆகியோருடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். இவர் காந்தியால் கவரப்பட்டு அகிம்சவாதியாக மாறினார்.

🏁 இவர் குளத்தங்கரை அரசமரம், மங்கையர்க்கரசியின் காதல், 'கம்பராமாயணம் - எ ஸ்டடி', மாஜினியின் வாழ்க்கை வரலாறு, நெப்போலியனின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட பல நூல்களையும் எழுதியுள்ளார்.

🏁 தமிழ் நவீன சிறுகதையின் தந்தை என்று போற்றப்படும் இவர் தன்னுடைய 44வது (1925) வயதில் மறைந்தார்.