👉 உடன்பிறப்புகள் தினம்
👉 முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் நினைவு தினம்
🌷 உடன்பிறப்புகள் தினம் : ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10ஆம் தேதி உடன்பிறப்புகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தினம், உடன்பிறந்த உறவுகளை கௌரவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.
🌷 1894ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி பிர்லா சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய கன்ஷ்யாம் தாஸ் பிர்லா, ராஜஸ்தான் மாநிலம் பிலானியில் பிறந்தார்.
🌷 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி டைட்டானிக் கப்பல் தனது முதல் மற்றும் கடைசி பயணத்தை துவக்கியது.
🌷 1931ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி உலகம் முழுவதும் இலக்கிய நட்சத்திரமாகக் கொண்டாடப்படுபவரான கலீல் ஜிப்ரான் மறைந்தார்.
🌷 1894ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி பிர்லா சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய கன்ஷ்யாம் தாஸ் பிர்லா, ராஜஸ்தான் மாநிலம் பிலானியில் பிறந்தார்.
🌷 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி டைட்டானிக் கப்பல் தனது முதல் மற்றும் கடைசி பயணத்தை துவக்கியது.
🌷 1931ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி உலகம் முழுவதும் இலக்கிய நட்சத்திரமாகக் கொண்டாடப்படுபவரான கலீல் ஜிப்ரான் மறைந்தார்.
🌷 ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10ஆம் தேதி உலக ஹோமியோபதி தினம் கொண்டாடப்படுகிறது. ஹோமியோபதி என்ற மாற்று மருத்துவ முறை மருத்துவர் சாமுவேல் ஹானிமன் (Samuel Hahnemann) என்பவரால் 1796ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
🌷 சாமுவேல் ஹானிமன் 1755ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார். இவரை போற்றும் வகையில் இவரது பிறந்தநாள் உலக ஹோமியோபதி தினமாக கொண்டாடப்படுகிறது.
🌷 ரயில்வே வாரம் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் மிக நீண்ட பயணத்திற்கு ரயில்களை மக்கள் பயன்படுத்துகின்றனர். உலகின் நான்காவது பெரிய ரயில் நெட்வொர்க்கை இந்தியா கொண்டுள்ளது.
🌷 இந்தியாவில் ரயில் போக்குவரத்திற்கு வித்திட்டவர்கள் ஆங்கிலேயர்கள். முதன்முதலாக 1853ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி மும்பை - தானே இடையில் முதல் பயணிகள் ரயில் துவங்கப்பட்டது.
🌷 மூன்று நீராவி எஞ்சின்களுடன் 34கி.மீ தூரத்திற்கு அமைக்கப்பட்ட பாதையில் முதல் ரயில் இயக்கப்பட்டது. மூன்று நீராவி எஞ்சின்களுக்கும் சுல்தான், சாஹிப் மற்றும் சிந்த் எனப் பெயரிட்டனர். இதனை நினைவுக்கூறும் வகையில் ரயில்வே வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
🌷 வடஅமெரிக்க பறவைகள் பாதுகாப்பின் தந்தை, ஜாக் மைனர் (Jack Miner) 1865ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் பிறந்தார்.
🌷 இவர் பறவைகள் பாதுகாப்பில் ஆர்வம் காட்டி, தனது நிலத்தில் ஒரு குளத்தை உருவாக்கினார். 1911ஆம் ஆண்டு முதல் ஏராளமான வாத்துகள் வரத் தொடங்கின. ஏறக்குறைய 50 ஆயிரம் பறவைகள் அங்கு இருந்தன.
🌷 1909ஆம் ஆண்டு வலசை போகும் (இடப்பெயர்வு) பறவைகளின் பாதையைக் கண்காணிக்க, அவற்றிற்கு பட்டயம் கட்டும் (Bird Banding) முறையை மேம்படுத்தினார். உலகில் இத்தகைய முறையை முதன்முதலாக மேம்படுத்தியவர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர்.
🌷 1923ஆம் ஆண்டு தான் கண்டறிந்த முறைகள் மற்றும் நீர்ப்பறவைகளின் பாதுகாப்பு ஆய்வுகள் அடங்கிய ஜாக் மைனர் அண்ட் தி பேர்ட்ஸ் என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
🌷 பள்ளி சென்று படிக்காத இவரது பெயர் பல கல்வி நிறுவனங்களுக்கு சூட்டப்பட்டது. வாழ்நாள் முழுவதும் பறவைகள் பாதுகாப்புக்காக பாடுபட்ட ஜாக் மைனர் தனது 79வது வயதில் (1944) மறைந்தார்.
🌷 1995ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி இந்தியாவின் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் மறைந்தார்.
Social Plugin