Type Here to Get Search Results !

ஏப்ரல் 9

👉 ராகுல் சாங்கிருத்தியாயன் பிறந்த தினம்


🌷 1882ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி ஆங்கில கவிஞர், ஓவியர் மற்றும் மொழிப்பெயர்ப்பாளரான டேன்டி கெய்பிரியல் ரோசட்டி மறைந்தார்.

🌷 1903ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி அமெரிக்க உயிரியலறிஞர் கிரிகோரி குட்வின் பிங்கஸ் பிறந்தார்.

🌷 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி அமெரிக்க வானியலாளர் தோரித் கோப்லீட் மறைந்தார்.


ராகுல் சாங்கிருத்தியாயன்

🌷 இந்தி பயண இலக்கியத்தின் தந்தை என்று அறியப்படுபவரும், மஹா பண்டிட் ராகுல் சாங்கிருத்தியாயன் (Rahul Sankrityayan) 1893ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் ஆஸிம்கார் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் கேதார்நாத் பாண்டே.

🌷 இந்திய விடுதலைப் போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார். இவர் எழுதிய 'வால்கா ஸே கங்கா' நூல் வேதகாலத்திற்கு முந்தைய நாட்களிலிருந்து 1944ஆம் ஆண்டு வரையிலான காலக் கண்ணாடி. இந்த வரலாற்றுப் புனைவு நூல் மொத்தம் 14 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.

🌷 இவர் புத்த துறவியாக மாறிய பிறகு தன் பெயரை ராகுல் சாங்க்ருத் தியாயன் என்று மாற்றிக்கொண்டார். இவர் முறைப்படி கல்வி எதுவும் கற்கவில்லை என்றாலும் சோவியத் யூனியனின் லெனின்கிராட் பல்கலைக்கழகம் இவரை இந்தியவியல் பேராசிரியராக நியமித்தது.

🌷 இவர் சாகித்ய அகாடமி விருது, பத்ம பூஷண் விருது, மகாபண்டிட் உள்ளிட்ட பல பட்டங்களையும் பெற்றுள்ளார். மகாபண்டிட் ராகுல் சாங்கிருத்தியாயன் தேசிய விருது, சாங்கிருத்தியாயன் சுற்றுலா விருது உள்ளிட்ட பல விருதுகள் இவர் பெயரில் வழங்கப்பட்டு வருகின்றன.

🌷 அறிவுக்கடல், தத்துவஞானி, மகாபண்டிதர் என்று போற்றப்படும் ராகுல் சாங்க்ருதியாயன் 1963ஆம் ஆண்டில் தனது 70வது வயதில் மறைந்தார்.


சரண் ராணி பாக்லீவால்

🎶 இந்துஸ்தானி சங்கீத மேதையும், புகழ்பெற்ற சரோட் வாத்தியக் கலைஞருமான சரண் ராணி பாக்லீவால் (Sharan Rani Backliwal) 1929ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி டெல்லியில் பிறந்தார். இவர் விடுதலைப் போராட்டங்களிலும் கலந்துக் கொண்டுள்ளார்.

🎶 1930ஆம் ஆண்டு முதல் மேடை கச்சேரிகளில் சரோட் வாசிக்க ஆரம்பித்தார். ஆண்கள் மட்டுமே வாசித்த சரோட் இசையில் இவரும் வல்லமை பெற்றார். இசைக்கலைஞர் என்ற வகையில் உலகம் முழுவதும் பயணம் செய்த முதல் இந்தியப் பெண் இவர்தான்.

🎶 இவர் இந்திய பாரம்பரியத்தை நிலைப்படுத்துவதற்காக அரிதான 450 வாத்தியங்களை சேகரித்து அதை டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.

🎶 இவர் பத்மஸ்ரீ, பத்ம பூஷண், தேசிய கலைஞர், சாகித்ய கலா பரிஷத் உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார். 'இந்தியாவின் கலாச்சாரத் தூதர்' என ஜவஹர்லால் நேருவால் புகழப்பட்டவர்.

🎶 'சரோட் ராணி' என போற்றப்பட்ட இவர் 78வது வயதில் (2008) மறைந்தார்.