Type Here to Get Search Results !

மே 10

👉 உலக செஞ்சரும பல்லுறுப்பு தினம்


🌷 1857ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி இந்தியாவில் மீரட் என்ற இடத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிரான சிப்பாய் கிளர்ச்சி ஆரம்பமானது.

🌷 1994ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பினத் தலைவரானார்.


உலக செஞ்சரும பல்லுறுப்பு தினம்

🌷 உலக செஞ்சரும பல்லுறுப்பு தினம் மே 10ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் பல்லுறுப்பு நோயால் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

🌷 இந்த பல்லுறுப்பு நோயானது தோல் மட்டுமில்லாமல் சிறுநீரகம், மூளை, இதயம், நுரையீரல், கண்கள் போன்ற உள்ளுறுப்புகளையும், எலும்புகளையும் தாக்குகிறது. தேவையில்லாத சில மருந்துகளை உட்கொள்ளுதல், கிருமித்தொற்று, உணவுப்பழக்கம் போன்ற காரணங்களாலும் மரபு ரீதியாகவும் இந்த நோய் ஏற்படுகிறது.

🌷 ஆண்களைவிட பெண்களே இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆரம்பத்திலேயே நோயை கண்டுபிடித்து சிகிச்சை பெற்றால், அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

🌷 தீராத காய்ச்சல், அதிகமாக முடி உதிர்தல், வாய்ப்புண், சோர்வு நிலை, ரத்த சோகை, தோலில் புதிய சிவப்பு நிற தடிப்புகள் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும்.


நயந்தரா சாகல்

🌷 சாகித்திய அகாதமி போர்டில் (ஆங்கிலம்) அறிவுரையாளராகப் பணி புரிந்த இந்திய எழுத்தாளர் நயந்தரா சாகல் 1927ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி அலகாபாத்தில் பிறந்தார்.

🌷 இவர் நேருவின் தங்கை விசயலக்குமி பண்டிட்டின் மகள் ஆவார். இலக்கியத்துக்கான சாகித்திய அகாதமி விருது (ஆங்கிலம்) 1986 ஆம் ஆண்டில் Rich Like Us (1985) என்ற இவரது ஆங்கிலப் புதினத்திற்கு வழங்கப்பட்டது.

🌷 மேலும், இவர் ஐ.நா. பொதுக் குழுவுக்கு அனுப்பப்பட்ட இந்தியத் தூதுக் குழுவிலும், மனித உரிமைகள் அமைப்பில் உதவித் தலைவராகவும் பணியாற்றினார்.