Type Here to Get Search Results !

மே 9

👉 கோபால கிருஷ்ண கோகலே பிறந்த தினம்


🌷 1874ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி குதிரையால் செலுத்தப்படும் உலகின் முதலாவது பயணிகள் வண்டி பம்பாய் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

🌷 1985ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.


கோபால கிருஷ்ண கோகலே

🌷 மகாத்மா காந்தியின் அரசியல் குருவான கோபாலகிருஷ்ண கோகலே 1866ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் கோதாலுக் என்ற இடத்தில் பிறந்தார்.

🌷 இவர் 1889ல் இந்திய தேசிய காங்கிரஸில் உறுப்பினரானார். திலகர் உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து பணிபுரிந்தார். இவர் வன்முறையைத் தவிர்த்து, அரசு நிறுவனங்களில் சீர்திருத்தத்தைக் கொண்டுவருவது ஆகிய இரு முக்கிய கொள்கைகளைப் பின்பற்றினார்.

🌷 இவர் 1899ல் மும்பை சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியர்களுக்குப் பொதுத்துறை விஷயங்களில் அதிக முன்னுரிமைகள் பெற்றுத்தர போராடினார்.

🌷 மூடநம்பிக்கைகள் மற்றும் இழிவுபடுத்தல்களை தூய்மைப்படுத்த எண்ணி, குழந்தைத் திருமண வன்கொடுமைகளைத் தடுத்திடும் நோக்கில் ஏற்புடைய சட்டத்தை விரும்பினர். 1905ல் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரானார். இந்திய சேவகர்கள் சங்கம் (Servants of India Society) என்ற அமைப்பை உருவாக்கினார்.

🌷 தன்னுடைய வாழ்நாள் இறுதிவரையிலும் தொடர்ந்து அரசியலுக்காகவே பாடுபட்ட கோகலே தனது 48வது வயதில் (1915) மறைந்தார்.


அன்னமாச்சார்யா

🌷 இசை உலகில் பல மரபுகளைத் தோற்றுவித்த அன்னமாச்சார்யா 1408ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் தாளப்பாக்கம் என்ற கிராமத்தில் பிறந்தார்.

🌷 இவர்தான் பாடல்களில் பல்லவி, அனுபல்லவி, சரணம் போன்றவைகளை உருவாக்கியவர் என கருதப்படுகிறது. 32,000-க்கும் அதிகமான கீர்த்தனைகளை எழுதியுள்ளார். அதில் 14,000 மட்டுமே கிடைத்துள்ளன. மேலும், பஜனை மரபினைத் தொகுத்து வழங்கிய சிறப்பும் இவருக்குண்டு.

🌷 இவர் எழுதிய ஓலைச் சுவடிகள் திருப்பதி கோவில் உண்டியலுக்கு எதிரே ஒரு அறையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சமஸ்கிருதம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் பல நூல்களை எழுதியுள்ளார்.

🌷 இவரது வாழ்க்கையை வைத்து தயாரிக்கப்பட்ட அன்னமய்யா என்ற தெலுங்கு திரைப்படம் 1997-ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

🌷 எந்த வேறுபாடுகளும் இல்லாத தெய்வீகத் தொடர்புதான் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தொடர்பு என்று கூறிய இவர் தனது 94-வது வயதில் (1503) மறைந்தார்.